முட்டி வலிக்கு நிவாரணம் தரும் சட்னி - ஒருமுறை இப்படி செய்ங்க
இன்றைய காலகட்டத்தில் பலரும் பல விதமான நோய்களால் பாடுபடுகின்றனர். அவற்றில் ஒன்றுதான் யூரிக் அமில பிரச்சினை என்பது மக்கள் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமானால் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கை முறை மற்றும் சீரான உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் யூரிக் அமில பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
இத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிமலப் பிரச்சனையில் இருந்து நிவாரண பெற விரும்பினால் நெல்லிக்காயில் சட்னி செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது ஒரு நல்ல நிிவாரணம் கிடைக்கும்.

பொருட்கள்
- புதிய நெல்லிக்காய் – 2-3
- கொத்தமல்லி இலை – சிறிது
- பச்சை மிளகாய் – 1-2
- சீரகம் – ½ டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- வெள்ளை எள் – 1 ஸ்பூன் ( விருப்பத்திற்கேற்ப )
- கடுகு – ½ டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சில இலைகள்
- எண்ணெய் – தாளிக்க

செய்முறை
- நெல்லிக்காய்களை நன்கு நறுக்கிக் கொள்ளவும்.
- மிக்ஸியில் நெல்லிக்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், உப்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- விரும்பினால் வெள்ளை எள்ளையும் சேர்க்கலாம்.
- கடுகு, கறிவேப்பிலை விட்டு எண்ணெயில் தாளித்து அரைத்த நெல்லிக்காய் கலவையில் சேர்க்கவும்.
- சூப்பர் நெல்லிக்காய் சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் பரிமாற தயார்.

யூரிக் அமில பிரச்சனைக்கு காரணங்கள்
யூரிக் அமிலப் பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள், பியூரின்கள் நிறைந்த உணவுகளை (சிவப்பு இறைச்சி, மட்டி, சர்க்கரை பானங்கள்) அதிகம் சாப்பிடுவது, உடல் பியூரினை அதிகமாக உற்பத்தி செய்வது அல்லது சிறுநீரகங்களால் அதை வெளியேற்ற முடியாமல் போவது, மரபணு காரணங்கள், சில மருந்துகள், வேகமாக செல் இறப்பு (புற்றுநோய் சிகிச்சையால்), மற்றும் உடல் பருமன் போன்றவையாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |