பட்டுப்போன்ற தலைமுடி வளர்ச்சிக்கு கற்றாழை எண்ணெய் - பக்குவமாய் எப்படி செய்வது?
முடி எதிர்வை கட்டுப்படுத்தி பட்டுப்போன்ற தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெய் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கற்றாழை எண்ணெய்
கற்றாழை தலைமுடி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றது. கற்றாழையை சிலர் பெஃக்காகவும் வேறு விதமாகவும் சருமத்திற்கும் தலைமுடிக்கும் பூசுவார்கள்.
ஆனால் தற்போது இருககும் இளைஞர்கள் யுவதிகளுக்கு முடி உதிர்தல் ஒரு புது பிரச்சனையாக இருக்கின்றது. இது இவர்களின் வாழ்க்கை பழக்கவழக்கங்களாகவும் இருக்கலாம்.
இதற்கு பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆால் பயன் கிடைப்பது என்பது குறைவே. இதற்கு ஒரு நல்ல தீர்வாக தான் கற்றாழை எண்ணெய் உள்ளது.
இந்த எண்ணெய் முடி உதிர்தல் பிரச்சனையை முற்றாக இல்லாமல் செய்கிறது. இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கற்றாழை எண்ணெய் செய்முறை
கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.
இந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலையில் முடியின் வேர்கால்களுக்கு படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடி வேர்களுகளுக்கு ஊட்டம் பெற்று வலிமையடைந்து, அதன் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.

கற்றாழை நன்மை
கற்றாழை பல நன்மைகளை கொண்டுள்ளது.
இது ருமத்தை ஈரப்பதமாக்குதல், முடி வளர்ச்சியைத் தூண்டுதல், செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் கண் பார்வையை மேம்படுத்துதல் போன்ற வேலைகளை செய்கிறது.
இது தவிர முகப்பரு, தழும்புகள், தோல் எரிச்சல் மற்றும் வெயிலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது. பக்குவமாய் கற்றாழையில் செய்யபட்ட எண்ணெய்யை வாரத்திற்கு 3 முறை பொட்டு 3 மணி நேரம் ஊற வைத்து குளித்தால் நல்ல பெறுபேறு விரைவாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |