காரசாரமான ‘ஆம்கி லௌஞ்சி’ பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது?
பச்சை மாங்காய், வெல்லம் மற்றும் எளிய மசாலா பொருட்களுடன் 10 நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய ‘ஆம்கி லௌஞ்சி’ இனிப்பு-புளிப்பு சுவை கொண்ட பக்கக்காரம் ஆகும். இது சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றது.

‘ஆம்கி லௌஞ்சி’
கோடை காலத்தில் விரைவாகவும் சுவையாகவும் தயாரிக்கக்கூடிய உணவுகளில் ஒன்றாக ‘ஆம்கி லௌஞ்சி’ (Aam Ki Launji) பார்க்கப்படுகிறது.
பச்சை மாங்காய், வெல்லம் மற்றும் எளிய மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பாரம்பரிய வடஇந்திய பக்கக்காரம், இனிப்பு-புளிப்பு-சிறிது காரம் ஆகிய மூன்று சுவைகளையும் ஒரே நேரத்தில் தருகிறது.
மேலும், இது வெறும் 10 நிமிடங்களில் தயாராகும் என்பதும் சிறப்பாகும்.

தேவையான பொருட்கள்
- பச்சை மாங்காய் – 1 (நறுக்கியது)
- வெல்லம் – 3–4 ஸ்பூன்
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- சோம்பு – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு சிறிது தண்ணீர்

செய்முறை
கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும். நறுக்கிய மாங்காயை சேர்த்து 2–3 நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து மாங்காய் மென்மையாகும் வரை சமைக்கவும். இறுதியாக வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து 2–3 நிமிடம் கெட்டியாகும் வரை சமைக்கவும். அவ்வளவு தான் ‘ஆம்கி லௌஞ்சி’ தயார்.