murungai-keera chutney recipe: இரு கைப்பிடி இருந்தாலே போதும்- இட்லிக்கு இப்படி சட்னி செய்யலாம்
பொதுவாக இந்தியர்கள் காலையுணவாக இட்லி, தோசை இப்படியான உணவுகளை தான் அதிகமாக எடுத்து கொள்வார்கள்.
இட்லி, தோசை போன்ற உணவுகளை தினமும் செய்யும் போது அதற்கு தொட்டுக் கொள்ள ஒரே மாதிரியான சட்னி செய்தால் வீட்டிலுள்ளவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.
அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதனை ஒரு சாக்காக வைத்து சாப்பாடு வேண்டாம் என்பார்கள்.
இப்படியான நேரங்களில் வீட்டில் சமைப்பவர்கள் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருப்பது வழமை.
அந்த வகையில் இக்கட்டான சூழ்நிலையில், இரு கைபிடி அளவு முருங்கை கீரை இருந்தாலே போதும் சுவையான சட்னி செய்யலாம். அதற்கான ரெசிபியை பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 3 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது)
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
சட்னி செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
பின்னர் அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களை அனைத்தையும் ஒரு தட்டி கொட்டி ஓரமாக வைக்கவும்.
இதனை தொடர்ந்து வாணலியை சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு சூடானதும் முருங்கைக்கீரையை சேர்த்து வதக்கி இறக்கவும்.
வதங்கிய கீரையை ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் வறுத்து வைத்திருந்த பொருட்களை கொட்டி கிளறவும்.
இறுதியாக தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளித்து சட்னி ஊற்றி கிளறினால் சுவையான முருங்கை கீரை சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |