சாதம் மீந்து போச்சா? கவலையை விடுங்க... இப்படி மொறு மொறு வடை செய்து சாப்பிடலாம்
பொதுவாகவே வீட்டில் செய்யும் சாதம் சில நேரங்களில் மிச்சம் இருக்கும்.இதனை அனேகமானோர் தூக்கியெறிந்து விடுவார்கள்.
இனிமேல் சாதம் மிஞ்சி விட்டால், உடனே அதை வைத்து மாலை நேரத்தில் தேனீருடன் சாப்பிடுவதற்கு சுவையான வடை செய்து கொடுங்க.
வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
சாதம் - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் சாதத்தை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கைகளால் பிசைந்துவிட வேண்டும்.
பின்னர் கைகளை நீரில் நனைத்து, பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து, அதை வடை போன்று தட்டி, நடுவில் ஒரு துளையையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடையைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மொறு மொறு வடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |