நெஞ்சு சளியை இல்லாமல் செய்யும் கொத்தமல்லி தண்ணி சட்னி- எப்படி செய்வது?
உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தோசை தான் அடிக்கடி செய்வார்கள் என்றால் அதற்கு இந்த கொத்தமல்லி தண்ணி சட்னி பெரும்பாலும் உதவும்.
இந்த சட்னிக்கு வழக்கமாக செய்வது போல வதககி செய்யமல் கொஞ்சம் பொருட்களை வதக்கி அரைத்து சட்னி செய்யுங்கள். இப்படி கொத்தமல்லி சட்னியை செய்யும் போது, சுவை புதுமையாகவும் அருமையாகவும் இருக்கும்.
இதை இட்லி தோசையுடன் சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவீர்கள். கொத்தமல்லி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள பதிவை படித்தால் போதும்.

தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- வெங்காயம் - 2 (நறுக்கியது)
- பூண்டு - 4 பல்
- பச்சை மிளகாய் - 1-2
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- கொத்தமல்லி - 2 கைப்பிடி
- உப்பு - சுவைக்கேற்ப
- சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க
- தாளிப்பதற்கு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- வரமிளகாய் - 1
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
அதன் பின் பூண்டு, பச்சை மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் அதில் 2 கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி குளிர விடவும்.

குளிர்ந்த பிறகு, வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போடவும். அதில் உப்பு, ½ டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி, இது தண்ணி சட்னி என்பதால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்து நன்கு கலக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |