ஆந்திரா கோங்குரா தொக்கு- 10 நாள் வரை கெட்டுப்போகாதப்படி செய்வது எப்படி?
பொதுவாக கீரைகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலை வலுவாக்கும்.
இவ்வாறு சேர்த்து கொள்ள வேண்டிய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஏகப்பட்ட சத்துக்கள் இருப்பதால் அவசியம் மதியம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அப்படி ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை தன்வசம் வைத்திருக்கும் கீரை வகைகளில் ஒன்று தான் புளிச்சக்கீரை. இந்த கீரை புளிப்புச்சுவையுடன் இருக்கும், மாறாக இதில் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. இந்த கீரையை ஆந்திராவிலுள்ளவர்கள் அதிகமாக சமைத்து சாப்பிடுவார்கள்.
புளிச்சக்கீரையை ஆந்திராவில் “கோங்குரா” என அழைப்பார்கள். இந்த கோங்குரா கீரையைக் கொண்டு செய்யப்படும் ரெசிபியாக கோங்குரா தொக்கு பார்க்கப்படுகின்றது. இதனை 10 நாட்கள் கூட வீட்டில் வைத்து சாப்பிடலாம்.
அப்படியாயின் 10 நாட்கள் வரை கெட்டு போகாதப்படி எப்படி வீட்டில் பதப்படுத்தி சாப்பிடலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* புளிச்சக்கீரை/கோங்குரா கீரை - 2 கட்டு
பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* புளி - சிறிய துண்டு
* கல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 7-8 (தட்டிக் கொள்ளவும்)
செய்முறை
முதலில் புளிச்சக்கீரையை சுத்தம் செய்த பின்னர் ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் எண்ணெய் விட்டு சூடானதும்,2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி விதை, சீரகம், வெந்தயம், வரமிளகாய், புளியை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பின்னர் உப்பு சேர்த்து நன்றாக குளிர விட்டு சுத்தமான மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைக்கும் பொழுது கொரகொரப்பாக அரைத்து கொள்வது நல்லது. அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து புளிச்சக்கீரையை போட்டு சுருங்கும் வரை நன்கு வதக்கி எடுக்கவும், அதையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
இறுதியாக வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிப்புக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து ஊற்றி இறக்கினால் சுவையான தொக்கு தயார்!
இறக்குவதற்கு முன்னர் 5 நிமிடம் வரை சூடான எண்ணெயில் தொக்கை வேக வைக்க வேண்டும். இப்படி செய்தால் தொக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |