உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கணுமா? இந்த பதிவு உங்களுக்கு தான்!
தற்காலத்தில் அதிகரித்துவரும் வேலைபளு, மன அழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலை பார்ப்பது, துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை,போதிய உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணிகள் உடல் பருமன் அதிகரிப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக அமையும் உடல் பருமன் பிரச்சினைக்கு உடல் பயிற்சி இன்றி தீர்வு காண முடியுமா? என்ற கேள்வி தற்காலத்தில் பெரும்பாலானவர்களிம் காணப்படுகின்றது.

நீங்களும் வேலைபளுக்களுக்கு மத்தியில் உடல் எடையை கட்டுக்குள் வைக்க போராடி வருகின்றீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
ஆம் உடற்பயிற்சியின்றியே உடல் எடையை நிச்சயம் கட்டுப்டுத்த முடியும். அதற்கு முக்கியமாக நமது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் முக்கிய சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும்.
அந்தவகையில் உடல் பயிற்சியின்றி உடல் எடையை குறைக்க எவ்வாறான செயல்பாடுகள் துணைப்புரியும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை கட்டுப்டுத்தும் எளிய வழிகள்!
பெரும்பாலானவர்கள் சாப்பிடாமல் இருந்தால் எடல் எடை குறையும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. ஆரோக்கியமான உணவு மற்றும் சரிவிகித உணவானது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காய்கறிகள், பழங்கள், தானியங்கள், குறைந்த அளவில் கொழுப்பு சத்தை கொண்ட புரத உணவுகள் ஆகியவற்றை தினசரி உணவில் முறையாக சேர்த்துக்கொள்வதாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பான சிற்றுண்டிகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை தவிர்ப்பதாலும் உடல் பயிற்சி செய்யாமலே உடல் எடையை கட்டுப்படுத்த முடியும்.

முக்கியமாக தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடலிலிருந்து நச்சுகளை நீக்கி, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) மேம்படுத்துகிறது. சிலர் தாகம் எடுக்கும் பொது அதையும் பசி என நினைத்து, அந்த நேரத்தில் அந்த உணர்வை போக்குவதற்கு அதிகளவில் தேவையற்ற சிற்றுண்டிகளை சாப்பிடுகின்றார்கள். பேதுமான அளவு தண்ணீர் குடிப்பது இந்த பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.
உடல் எடை குறைப்பில் உடற்பயிற்சியை விடவும், போதியளவு தூக்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு 7–8 மணி நேரம் தூங்குவது அவசியம்.

உறங்குவதில் குறைபாடு ஏற்படும் போது அது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை பாதித்து, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் விரும்பி உட்கொள்ள வழிவகை செய்கிறது. மேலும் தூக்கமின்மை மன அழுத்தத்துக்கும் முக்கிய காரணமாக அமைகின்றது. மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக மாறிவிடுகின்றது. எனவே போதிய தூக்கம் இன்றியமையாதது.
மேலும் மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்பில் நேரடியாக தாக்கம் செலுத்துவதால், மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகிறது. தியானம், பாடல் கேட்பது, நடைப்பயிற்சி செய்வது போன்றன மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

பிடித்த உணவுகளை பார்க்கும் போது மாத்திரம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுகின்றது.எனவே எந்த உணவாக இருந்தாலும் அதை நாம் எடுத்துக்கொள்ளும் அளவு தொடர்பில் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது உடல் எடையை விரைவில் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறான நடவடிக்கைகளில் முறையாகவும் தொடர்ச்சியாகவும் கவனம் செலுத்தி வரும் பட்சத்தில் நிச்சயம் உடல் எடையை உடற்பயிற்சி செய்யமலேவே கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |