10 கிலோ வரை உடல் எடை குறைக்குமா? வெந்நீரை இப்படி குடித்தால் போதும்
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நம்மில் பலர் பல வழிகளில் முயற்சி செய்துகொண்டு வருகின்றார்கள்.
இதில் பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை வழிமுறைகளே சிறந்தது.
அந்தகாலத்தில் உடல் எடையினை குறைக்க பலர் சுடுதண்ணீரையே பருகி வந்தனர்.
அதாவது உங்கள் உடல் எடையை குறைக்க வெறும் வெந்நீர் மட்டுமே போதும். இது மிக எளிதாக உங்கள் தொப்பை மற்றும் உடல் எடை எளிய முறையில் குறைத்து விடுகின்றது.
அந்தவகையில் வெந்நீரை எப்படி குடித்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
எப்போது எடுத்து கொள்ள வேண்டும்?
- காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் 200ml முதல் 250ml வரை வெந்நீரை குடிக்கலாம். இந்த வெந்நீர் அதிக சூடாக்கவும் இருக்க கூடாது.அதேபோல் ரொம்பவும் மிதமானதாகவும் இருக்க கூடாது
- நீங்கள் காலை உணவு உண்பதற்கு முன் அதாவது 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்த வேண்டும்.
- காலை உணவு சாப்பிட்ட பிறகு 30 நிமிடம் கழித்து ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்த வேண்டும். இவ்வாறு மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிடுவதற்கு 1/2 நேரத்திற்கு முன் மற்றும் பின் இரண்டு வேளையும் ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்த வேண்டும்.
- பின் இரவு உறங்க செல்வதற்கு முன் ஒரு முறை வெந்நீர் அருந்துங்கள்.
நன்மைகள்
- சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையும்.
- முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.
- சுடுநீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.
- மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும்.
- முதுமை பருவத்தை தள்ளி போடமுடியும்.
- உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது
- கடும் குளிர் காலத்தில் ஏற்படும் மூக்கு அடைப்பு, தொண்டை கட்டும் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும்.
- உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்கலாம்.
குறிப்பு
எப்பொழுதும் வெந்நீரை நின்று கொண்டு குடிக்க கூடாது. அது நம் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தலாம்.அதனால் அமர்ந்து சம்மணமிட்டு அருந்துங்கள்.
இது தான் நமது உடலில் உள்ள கெட்ட கழிவுகள் அனைத்தும் வேயேற்ற எந்த ஒரு இடையூறுகளும் ஏற்படாது.