Whatsapp நம்பரை போனில் Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப உங்களுக்கு தெரியுமா?
தற்காலத்தில் அனைத்தும் தெழில்நுட்ப மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூகவளைத்தளங்களில் தான் கண்விழிக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.
அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விடயங்கள் இருக்கவே செய்கின்றன.
Whatsapp இல் இருந்து நீங்கள் யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும், முதலில் உங்களுடைய Whatsapp காண்டாக்ட்டில் அவர்களின் வாட்ஸ்அப் எண் சேமிக்கப்பட்டிருப்பது அவசியம்.
Whatsapp எண்களை நமது காண்டக்ட்டில் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு மெசேஜ் செய்ய வழி எதுவும் இருக்கின்றதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அவ்வாறு மெசேஜ் அனுப்ப கூடிய முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முறை 1
முதவில் உங்களுடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் உள்ள வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறக்க வேண்டும்.
பின்னர் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப விரும்பும் மொபைல் நம்பரை காப்பி செய்யது கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கீழே காணப்படும் New Chat என்ற பட்டனை அழுத்தி Whatsapp காண்டாக்ட்களின் கீழ் உள்ள உங்களது பெயரை டேப் செய்ய வேண்டும்.
பின்னர் டெக்ஸ்ட் பாக்ஸில் நீங்கள் காப்பி செய்த மொபைல் நம்பரை பேஸ்ட் செய்து Send என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
மொபைல் நம்பரை டேப் செய்த பிறகு, அந்த நம்பர் Whatsapp இல் இருந்தால் உங்களால் Chat with ஆப்ஷனை காணகூடியதாக இருக்கும்.
அதனை டேப் செய்து குறித்த நம்பரை சேமிக்காமலேயே உங்களால் Whatsapp மெசேஜை எளிமையாக அனுப்ப முடியும்.
முறை 2
முதலில் மொபைலில் காணப்படும் பிரவுசரை திறக்கவும். அட்ரஸ் பாரில் https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx. xxxxxxxxxx இந்த லிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
phone=xxxxxxxxxx. xxxxxxxxxx இந்த இடத்தில் நீங்கள் Whatsapp மெசேஜ் அனுப்ப விரும்பும் மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.
தொலைபேசி இலக்கங்களுக்கு முன்னர் நாட்டின் குறியீடு இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் லிங்கை திறக்க அதனை டேப் செய்து Chat ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
இப்போது நீங்கள் அந்த நபரின் Whatsapp சாட்டிற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள். அவரது நம்பரை சேமிக்காமலேயே உங்களால் குறித்த நபருக்கு மெசேஜ் அனுப்ப கூடியதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |