உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையா இருங்க! கொரோனவா கூட இருக்கலாமாம்
கோவிட்-ன் புதிய Omicron BF.7 தொற்று பல நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகின்றது.
மேலும் இந்த வைரஸ் வரும் மாதங்களில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுவிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
எனவே இவற்றை தடுக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
Omicron BF.7
இது ஒரு குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகவும் பரவக்கூடிய மாறுபாடு ஆகும்.
இது மீண்டும் தொற்றுநோயை ஏற்படுத்தும் அதிக திறன் கொண்டது மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களை கூட பாதிக்கலாம்.
இதனை மிக விரைவாக தொற்றுகிறது மற்றும் RT-PCR சோதனைகளில் கண்டறிவது கடினம்.
யாரை தாக்க அதிகம் வாய்ப்பு
தடுப்பூசி போடப்படாதவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் - குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களை இது பாதிக்கும்.
BF.7-ன் அறிகுறிகள்
- வறட்டு இருமலை இது லேசாகத் தொடங்குகிறது, ஆனால் சில வாரங்களில் மோசமாகிறது. இதன் விளைவாக, இது மார்பு இறுக்கம் மற்றும் சுவாசக் கஷ்டம் போன்ற பிற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
- தொண்டைப் புண் போன்ற உணர்வு இருக்கும். இது 'கீறல்' அல்லது எரிச்சலூட்டும் உணர்வைக் கொடுக்கும்.
- கோவிட் நோய்த்தொற்று உடலின் பாதுகாப்பை உடனடியாக பலவீனப்படுத்தி, அன்றாடச் செயல்பாடுகளைக் கூட கடினமாக்கிவிடும்.
-
மூக்கு ஒழுகுதல் BF.7 இன் மற்றொரு அறிகுறியாகும்.