பழைய தங்க நகைகளை புதிதாக மாற்ற வேண்டுமா? இதுல ஊற வைத்து கழுவி பாருங்க
நாம் வைத்திருக்கும் நகைகளை எவ்வாறு புதிது போன்று மாற்றுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றனர்.
தற்போது பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்னவெனில் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என்பதே.. அந்த அளவிற்கு தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
மேலும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் தான் பாதுபாப்பான ஆதரமாக இருக்கின்றது. இவ்வாறு நாம் சிறுக சிறுக சேர்த்து வைக்கும் தங்கத்தினை எவ்வாறு புதிது போன்று மாற்றுவது என்ற வழிமுறைகளை இந்த பதிவுகளை தெரிந்து கொள்வோம்.
தங்க நகையை எவ்வாறு சுத்தம் செய்வது?
நாம் போடாமல் பீரோவில் வைத்திருக்கும் நகைகள் மட்டுமின்றி, அன்றாடம் நாம் அணிந்து கொள்ளும் நகைகளையும் நாம் புதுது போன்று மாற்ற முடியும்.
முதலில் பவுல் ஒன்றினை எடுத்துக்கொண்டு அதில் வெதுவெதுப்பான நீரை நிரப்ப வேண்டும்.
பின்பு இதில் வாஷிங் லிக்விட் அல்லது ஒரு ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையில் உங்களது நகைகளை போட்டு, 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பின்பு மென்மையான பிரஷைப் பயன்படுத்தி ஓரங்களில் எஞ்சியுள்ள அழுக்குகளை தேய்த்து எடுக்கவும். அழுத்தம் கொடுக்காமல் லேசாக தேய்த்தால் நகையில் பாதிப்பு வராது.
பின்பு தூய தண்ணீரில் இதனை அலசிவிட்டு, மென்மையான துணியை பயன்படுத்தி ஈரத்தை ஒத்தி எடுக்கவும். இப்பொழுது உங்களது நகை நிச்சயம் பழபழவென ஜொலிப்பதை காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |