கறை படிந்த டாய்லெட்டை பளபளப்பாக்கும் திரவம்.. வீட்டிலேயே செய்வது எப்படி?
பொதுவாக வீடுகளில் என்ன தான் பிரச்சினை அல்லது சுத்தம் செய்ய ஆட்கள் இல்லை அல்லது நேரமே இல்லாவிட்டாலும் சமையலறையும் கழிப்பறையும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
ஏனெனின் மற்ற அறைகளில் உள்ள அழுக்குகளால் வரும் பாதிப்பு குறைவாக இருந்தாலும் கழிவறையில் இருக்கும் அழுக்குகளால் வரும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது வெறும் தோற்றத்திற்காக மட்டுமல்ல ஒரு மனிதரின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அவர் பயன்படுத்தும் கழிவறையை பார்த்துக் கண்டுபிடித்து விடலாம். இதனை அலட்சியமாக விடும் பட்சத்தில் தொடர் துர்நாற்றம், பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்காது.
சில வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் பார்க்கும் பொழுது துர்நாற்றம், மஞ்சள் கறை போன்றவற்றை அவதானிக்கலாம். மாறாக சில வீடுகளில் என்ன தான் சுத்தம் செய்து, வாசனையுடன் வைத்தாலும் மஞ்சள்கறை போகாது.
அப்படியாயின், கழிவறை அழகை கெடுக்கும் மஞ்சள் கறையை எப்படி இல்லாமல் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவில் உள்ள சோடியம் 바이கார்போனேட் துர்நாற்றத்தை இல்லாமல் செய்யும். இதில் சிறியளவு எடுத்து தேய்த்தால் கூட கழிவறை சுத்தமாகி விடும். உங்களுடைய வீடுகளில் மஞ்சள் கறை அதிகமாக இருந்தால் இரவில் 2–3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து போட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள். இரவு முழுவதும் கழிவறை அடைத்து வைத்திருந்து விட்டு, காலையில் எழுந்து தேய்த்து கழுவினால் மஞ்சள் கறை தடம் தெரியாமல் மறையும்.

2. வினிகர்
வினிகர் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் திரவம் அல்ல, லைம்ஸ்கேல், சோப்பு படிவம் மற்றும் கழிப்பறை வளையங்களி் இருக்கும் கறைகளை போக்கும் அளவுக்கு வலிமையானது. நீண்ட நாட்களாக படிந்து இருக்கும் கறைகளை கூட சுலபமாக நீக்கி விடும். முதலில் ஒரு பேப்பரில் வெள்ளை வினிகரை நனைத்து, அதனை மஞ்சள் கறைகள் உள்ள இடத்தில் போட்டு விடவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் காகிதங்களை எடுத்து விட்டு தேய்த்து கழுவினால்க கறைகள் மறைந்து விடும்.

3. உப்பு
நம்மிள் பலருக்கும் உப்பின் மகிமை தெரியாது. உப்பு என்றால் வெறும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் அல்ல. சருமத்தில் வரும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. துர்நாற்றம் உள்ள இடங்களை உப்பு போட்டு கழிவினால் சிறந்த பலனை பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |