வீட்டில் கரண்டி, கத்தி எல்லாம் புதுசு போல மாறணுமா? அருமையான காணொளி
சமையலறையில் நாம் பயப்படுத்தும் கத்தி, கரண்டி பொருட்களில் சில தருணங்களில் கறைகள் ஏற்பட்டுவிடும். மேலும் நாம் என்னதான் சரியாக சுத்தம் செய்து வைத்தாலும், பளிச் என்று இல்லாமல் மங்கலாகவே இருக்கும்.
இதனை சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், ஆனால் இதனை மிகவும் எளிதில் புதுசு போல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை காணொளியில் காணலாம்.
தேவையான பொருட்கள்
ஃபாயில் பேப்பர் - தேவையான அளவு
பேக்கிங் சோடா - அரை கப்
உப்பு - 1 டீஸ்பூன்
வெள்ளை வினிகர் - 1 கப்
சுடு தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
பிளாஸ்டிக் ட்ரே ஒன்றில் ஃபாயில் பேப்பரை விரித்துக்கொண்டு, முதலில் பேக்கிங் சோடா பின்பு உப்பு அதனைத் தொடர்ந்து வினிகர் மற்றும் சுடு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.
இந்த கலவையில் கத்தி, கரண்டி இவற்றினை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு எப்பொழுதும் போல் பாத்திரம் தேய்க்கும் சோப்பை போட்டு தேய்த்து கழுவினால் போதும். கத்தி கரண்டி புதிதாக ஜொலிக்கும். இதனை விரிவாக காணொளியில் காணலாம்.