மழைக்காலங்களில் மீன் வாங்கும் போது ஏமாந்திடாதீங்க... இப்படித்தான் பார்த்து வாங்கனுமாம்
மழைக்காலங்களில் மீன்களை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மீன்
கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றான மீன் அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த உணவாகும். மீனை விரும்பாத அசைவ உணவுப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள்.
ஆனால் மழைக்காலங்களில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இதன் சுவை மற்றும் தோற்றம் சற்று மாறுபடும் என்று கூறப்படுகின்றது.
அத்தருணங்களில் நாம் மீன்களை நன்றாக பார்த்து வாங்க வேண்டும். மீன்களில் எவ்வாறு நல்ல மீன், கெட்டுப்போன மீன் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

image: istock
மீன்களை எவ்வாறு பார்த்து வாங்குவது?
மீனை முகர்ந்து பார்க்கும் போது கடல்நீருடன் சேர்ந்த உப்பு வாசனை இருந்தால் நல்ல ப்ரெஷ்ஷாக இருக்கின்றது என்று அர்த்தம். துர்நாற்றம் இருந்தால் அதனை வாங்காமல் தவிர்க்கவும்.
அதே போன்று மீனின் செதில்களை உயர்த்தி பார்க்கும் போது அடர்சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் நல்ல மீன் என்றும், மாறாக வெளிர் மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்பட்டால் அவை கெட்டுப்போன மீனாகும். சில தருணங்களில் செதில்களில் சாயம் பூசி சிவப்பாக வைத்திருப்பார்கள், ஆதலால் நன்றாக கைவைத்து தடவி பார்த்து வாங்கவும்.

மீனின் கண்களை அவதானித்தால் தெளிவாகவும், பிரகாசமாக இருந்தால் நல்ல மீன் ஆகும். அதற்கு மாறாக குழி விழுந்து புகைமூட்டம் போன்று காணப்பட்டால் கெட்டுப்போன மீன் ஆகும்.

மீனின் சதைப் பகுதியை அழுத்தி பார்த்தால் தடிமனாகவும், கை விரல் வைத்து அழுத்திய பின்பு பழைய நிலைக்கு உடனே திருப்பினால் நல்ல மீன் ஆகும். அதுவே குழி விழுந்தால், கொழ கொழப்பான தன்மையில் இருந்தால் மீன் கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம்.

image: istock
மீனை வெட்டும்போது அதன் மேற்பரப்பு பளபளப்பாக இருக்கும். மேலும் கடலிலிருந்து வந்ததால் ஈரப்பதம் காணப்பட்டால் நல்ல மீன் ஆகும். இதுவே நிறம் மாறியிருந்தாலோ, உலர்ந்து காணப்பட்டாலோ அவை கெட்டுப்போனதாக அர்த்தம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |