டெபிட் கார்ட் தொலைந்து விட்டால் எஸ்எம்எஸ் மூலம் கார்டை ப்ளாக் செய்யலாம்
பொதுவாகவே இப்போது நாம் எல்லோரும் பர்ஸில் பணத்தை வைத்துக் கொண்டு அலைவதில்லை. அனைவரும் ஏ.டி.எம் கார்ட், டெபிட் கார்ட் என கார்ட்டுகளை பர்ஸில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வசதிகள் எல்லாம் உங்கள் நேரத்தை சேமிப்பதற்கும் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வேலை இவை எங்காவது தொலைந்துப் போய் விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வங்கி அட்டைகள் தொலைந்தால்
உங்கள் டெபிட் கார்ட் தொலைந்தவுடன் பாவனையில் இருந்து தடுப்பதற்கு வங்கியின் கட்டணமில்லா எண்களாக 1800 11 2211 அல்லது 1800 425 3800 என்ற எண்களுக்கு அழைத்து கொடுக்கும் தகவல்களை பின்பற்றி கார்ட்டை தடுக்க வேண்டும்.
அப்படி இணைய வங்கி மூலம் கார்டை தடை செய்ய SBI வலைத்தளமான onlinesbi.comஇல் பயனரின் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு SBI இன்டர்நெட் போர்ட்டலில் செல்ல வேண்டும்.
இந்த இணைய சேவைக்குள் சென்று ஏ.டி.எம் கார்ட் சேவை விருப்பத்தை க்ளிக் செய்து கார்டை தடை செய்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கவும்.
பின்னர் தடைசெய்ய விரும்பும் ஏ.டி.எம். அல்லது டெபிட் கார்ட்கள் இணைப்பட்ட கணக்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியலில் டெபிட் கார்டின் முதல் மற்றும் கடைசி நான்கு இலக்கங்கள் காட்டப்படும் அவற்றை நீங்கள் சரிப் பார்த்துக் கொள்ள வேண்டும் பிறகு கணக்கு வைத்திருப்பவர் அவர்கள் தடுக்க விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தை சொல்லி விருப்பத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
இறுதியில் உறுதிப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியானவையா என்பதை மறுபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும்.
கோரிக்கைகள் அனைத்தும் சரியானதும் OTP எண்ணைத் தேர்வுசெய்யவும் பின்னர் OTP எண்ணை உள்ளிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து தகவல்களும் சரியாயின் கார்ட் ப்ளாக் செய்யப்பட்டவுடன் கணக்கு வைத்திருப்பவருக்கு எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் எண் கிடைக்கும்.
எஸ்எம்எஸ் மூலம்
நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் கார்டை ப்ளாக் செய்ய நினைத்தால் BLOCK கார்டின் கடைசி நான்கு இலக்கங்களை பதிவு செய்து 567676க்கு அனுப்பவும்.
இது உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை மாத்திரம் பயன்படுத்தினால் இந்த சேவையைப் பெறமுடியும்.
இந்த சேவை உறுதிப்படுத்தப்பட்டபின் SMS அறிவிப்பில் உங்கள் டிக்கெட் எண், கார்ட் நிறுத்தப்படும் நேரம் மற்றும் திகதி குறிப்பிடப்படும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |