போர்வைகளை வாஷிங் மிஷினில் துவைக்க போறீங்களா? இதையெல்லாம் கட்டாயம் கவனிக்கவும்
தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இதனால் கைகளால் துணிதுவைப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவரும் நிலையில் வாஷிங் மிசின் பயன்பாடு அதிகமாகி உள்ளது.
கிட்டத்தட்ட அனைவரது வீடுகளிலும் வாஷிங் மெஷின் ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.
அனைவரும் துணிதுவைப்பதற்கு வாஷிங் மெஷினையே பாவிக்கின்றனர் ஆனால் அதில் போர்வைகளை துவைக்க வேண்டும் எனும் பட்சத்தில் பலருக்கும் பயம் ஏற்படுகின்றது.
போர்வைகளை இதில் போட்டு துவைத்தால் வாஷிங் மெஷின் பழுதாகிவிடுமோ என்ற சிந்தனையும் எழகூடும்.
பெட்ஷீட்டை வாஷிங் மெஷினில் போடும் முன்னர் கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கவனிக்க வேண்டிய விடயங்கள்
போர்வைகளை மெஷினுக்குள் போடுவதற்கு முன் போர்வையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்பையும் ஒரு முறை பரிசீலிக்க வேண்டும்.
இந்த போர்வைகளை துவைக்கலாமா அல்லது ட்ரை க்ளீனிங்கா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அதன் பின்னர் வாஷிங் மெஷின் என்ன அமைப்பு என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் கணமாக போர்வைகளை துவைக்க வேண்டும் என்றால் அந்த வாஷிங் மெஷினில் 7 கிலோ எடையை தாங்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
சாதாரண துணி லேசாக இருப்பதால் அது திரும்பி புரண்டு துவைத்து கொள்ளும். ஆனால், போர்வை கணமாக இருப்பதால் போர்வையை வாஷிங் மெஷினில் போட்டால் நீங்கள் அதை 2 - 3 முறை மேலும், கீழும் திருப்பிவிட வேண்டும் அதன் மூலம் சுத்தமாக துவைக்க முடியும்.
இந்த விடயங்களை கவனித்த பின்னர் பயமின்றி போர்வைகளை தாராளமாக வாஷிங் மெஷினில் துவைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |