பெட்ஷீட், தலையணை உறையை எப்போது துவைக்கிறீங்க? எச்சரிக்கை பதிவு
படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஒரு மனிதர் தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை படுக்கைக்கு தான் செலவிடுகின்றனர். அவ்வாறு நாம் அதிகமாக பயன்படுத்தும் படுக்கை சுத்தமாக இருந்தால் தான் நல்ல தூக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற முடியும்.
தூங்கி எழும்பிய பின்பு படுக்கையை சரியான ஒழுங்கு செய்து வைத்துவிட்டு செல்கின்றோம். ஆனால் அதனை எப்பொழுது துவைக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிகமான நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தினால், உடல் எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிப் பூச்சிகள், பாக்டீரியா, பூஞ்சை என துணிகளில் படிந்து கொண்டே செல்லும்.
இதனால் தோல் அரிப்பு, ஒவ்வாமை, முகப்பரு, மூச்சுத்திணறல், துர்நாற்றம், சரியாமல் தூங்கமுடியாத பிரச்சனைகள் ஏற்படும்.

எத்தனை நாட்களுக்குள் துவைக்க வேண்டும்?
படுக்கை விரிப்பினை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் துவைக்க வேண்டும். அதிலும் அதிகமாக வியர்ப்பவர்கள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள் இவர்கள் எனில் 3 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் துவைக்கவும்.
அதுவே தலையணை உறையினை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவும். அவ்வாறு இல்லையெனில் அதிகபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது துவைத்து சுத்தம் செய்யவும்.
துவைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து துவைப்பது சிறந்தது. ஏனெனில் அதில் படிந்திருக்கும் பாக்டீரியா, கிருமிகள் அழியுமாம்.

அதிகமாக வியர்ப்பவர்கள், ஒவ்வாமை பிரச்சனை, சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி துவைப்பது அவசியம்.
இவ்வாறு அடிக்கடி துவைத்து பயன்படுத்தும் போது தரமான தூக்கத்தையும், உடல்நலத்தில் மிகப்பெரிய மாற்றத்தினையும் பெறுவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |