Summer Tips: கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
கோடை காலத்தில் தண்ணீர் எவ்வளவு பருக வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவியாக இருக்கின்றது.
கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நீரிழப்பு ஏற்படுகின்றது. உடம்பில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் நாள் ஒன்றிற்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நன்மை அளிக்கின்றது. பெண்களுக்கு 2.7 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணீரும் குடிப்பது சரி என்று கூறப்படுகின்றது.
ஆனால் இவை மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடும். தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் அருந்துபவர்களுக்கு போதுமான பலன் கிடைப்பதில்லை.
ஆதலால் தினசரி 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரையில் தண்ணீர் எடுத்துக் கொள்வது மிக அவசியமாகும். கோடை காலத்தில் அதிகமாகவும், குளிர் காலத்தில் குறைவாகவும் தண்ணீர் குடிக்கக்கூடாது.
நிபுணர்கள் கூறுகையில் போதுமான தண்ணீர் குடிப்பதால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.
ஆனால் நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவும் உங்கள் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும். உடல் செயல்பாடு அதிகம் உள்ளவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கின்றனர்.
சிலர் பழங்கள், காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து தண்ணீர் சத்தை பெறுகின்றனர். சிலர் வெயிலில் வேலை செய்யும் நிலையில் இருந்தால், அவர்களின் வியர்வை வெளியேற்றத்திற்கு இணையாக தண்ணீர் அருந்துவது முக்கியமாகும்.
இத்தகைய நபர்கள் தங்கள் உடல் வெப்பநிலைக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருந்தால், இதுவே பல நோய்களுக்கு நம்மை பாதுகாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |