பாதாமை எவ்வளவு நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்? இனி இந்த தவறை செய்யாதீங்க
பாதாமின் ஊட்டச்சத்துக்களை நாம் முழுமையாக் பெற்றுக் கொள்வதற்கு நீரில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாதாம்
பாதாமில் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு மற்றும் மோனோசார்ச்சுரேட்டட் கொழுப்பு உள்ளதால் எல்டிஎல் கொழுப்பைக் குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியும்.
பாதாமில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ள நிலையில், இதய நோயிலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றியாகவும் இருக்கின்றது.
iStock/Getty Images
பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அவை மூளையின் ஆரோக்கியத்தினை ஆதரிக்கின்றன.
பாதாமை ஊறவைப்பது என்பது ஏராளமான உடல்நல நன்மைகளை வழங்கும் ஒரு பிரபலமான நடைமுறையாகும்.
Image: Canva
எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?
காலையில் ஊறவைத்த பாதாமை உட்கொள்வது பசியைக் குறைக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவும்.
பாதாமை ஊறவைப்பதற்கான சிறந்த நேரம் பொதுவாக 8 முதல் 12 மணி நேரம் வரை ஆகும். அதே நேரம் பாதாமை அதிக நேரம் ஊற வைப்பது ஊட்டச்சத்து இழப்பிற்கு வழிவகுக்கும்.
பாதாமில் பைடிக் அமிலம் மற்றும் நொதி தடுப்பான்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஊற வைத்த பாதாம் 6லிருந்து 8 சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து நாள்முழுவதும் சுறுசுறுப்பாகவும் வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |