கோவில் உண்டியலில் எவ்வளவு பணம் காணிக்கையாக போடுறீங்க? இதற்கும் பலன் இருக்குதாம்
கோவில் உண்டியலில் நாம் செலுத்து காணிக்கையின் மதிப்பை வைத்து இருக்கும் பலனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோவில் காணிக்கை
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வதையும், நேர்த்தி கடன் வைத்து அதனை செய்வதையும், காணிக்கை செலுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அவ்வாறு கோவிலுக்கு செல்பவர்கள் மனதில் ஒவ்வொரு குறைகளுடனே சென்று கடவுளிடம் முறையிட்டு வருகின்றனர். அவரவர் சக்திக்கு உகந்த காணிக்கையும் செலுத்தி வருவார்கள்.
கோவிலுக்கு சென்றுவிட்டு காணிக்கை செலுத்தாமல், வருவது என்பது எந்தவொரு நிலையிலும் நடக்காத காரியமாகும். கோவிலுக்கு சென்று வருவதால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து மன மகிழ்ச்சியும் கிடைக்கின்றது.
சில பக்தர்கள், தங்கம், வெள்ளி, வைரம் இவற்றினால் பொருள் செய்து வைத்து தங்களது நேர்த்திகடனை செய்து வருவார்கள். ஆனால் சாதாரணமாக சென்றுவிட்டு, நம்மால் முடிந்த பணத்தை உண்டியலில் போட்டுவரும் மக்களை நாம் அதிகமாகவே அவதானித்திருப்போம்.
அவ்வாறு நாம் சாதாரணமாக சென்றுவிட்டு போடும் காணிக்கையின் மதிப்பு குறித்து நமக்கு பலன் கிடைக்கும். ஆம் எவ்வளவு காணிக்கை போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
எவ்வளவு போட்டால் என்ன பலன்?
7 ரூபாய் காணிக்கையாக போட்டால், பல நோய்களிலிருந்து விடுதலை கிடைக்குமாம். திருமலைக்கு ஏழு மலைகள், ஏழு சப்த ரிஷிகள் இருப்பதால் இவ்வாறு கூறப்படுகின்றது.
9 ரூபாய் காணிக்கை போட்டால், எதிரிகளின் தொல்லை, சனி தொல்லை நீங்குவதாக கூறப்படுகின்றது. அம்மன் கோயிலில் நவராத்திரி எண் 9 ஆகும்.
11 ரூபாய் காணிக்கையாக போட்டால், மனப் பிரச்சினைகள் நீங்குவதுடன், நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சினைகளும் மறைந்துவிடுமாம். சந்திரனுக்குச் சாதகமான எண் 11 ஆகும்.
12 ரூபாயை உண்டியலில் போட்டால் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கிடைக்குமாம். ஏழைகளும் பொருளாதார ரீதியாக முன்னேறுவார்கள் என்கிறார்கள். காளிகா தேவியின் சித்தி எண் 12 ஆகும்.
அதுவே 21 ரூபாய் காணிக்கையாக செலுத்தினால், துரதிர்ஷ்டம் நீங்குவதுடன், அதிர்ஷ்டம் ஏற்படும். வேலையில் தடைகள் யாவும் நீங்குமாம். மகா கணபதியின் அருள் எண் 21 ஆகும்.
குருவின் அருள் எண்ணான 54 ரூபாயை காணிக்கையாக போட்டால் பணவரவு அதிகரித்து, அதிர்ஷ்டமும் தேடி வருமாம்.
கல்ப விருட்சத்தின் ஆதார எண்ணான 101 ரூபாய் காணிக்கையாக போட்டால், ஜாதக தோஷம் நீங்கி, மனக்கோரிக்கை நிறைவேறவும் செய்யுமாம்.
108 ரூபாயை உண்டியலில் போட்டால் சகல சித்திகளும் கிடைப்பதோடு, சகல தோஷங்கள் நீங்குவதோடு, மனக்கோரிக்கைகளும் நிறைவேறுமாம். ஸ்ரீ சக்கரத்தின் எண் 108 ஆகும்.
116 ரூபாய் உண்டியலில் காணிக்கையாக போட்டால், புண்ணியம் கிடைப்பதுடன், ஏழு ஜென்மப் பாவம் நீங்கவும் செய்யுமாம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் மன்னிக்கப்படுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).