ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும்? புதிய தகவல்
ஒருவர் வீட்டில் சட்டப்பூர்வமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என தற்போத தகவல் வெளியாகி உள்ளது.
தங்கம்
தங்கம் என்பது ஒரு உலோகம். ஆனால் தற்போது இது தமிழர்களின் கலாச்சாரத்தில் மற்றும் வணிகத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
எதாவது ஒரு நல்ல காரியம் வீட்டில் தொடங்கும் போது முதலில் தங்கத்தை வைத்தே தொடங்குவோம். தற்போது இருக்கும் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்கத்தை கடன் வாங்கியாவது முதலீடு செய்து வைத்துள்ளனர்.
தற்போது அனைத்து வர்க்கத்தினருக்கும் தங்கத்தை முதலீடாக கருதி சேமித்து வைக்கின்றனர். பல நன்மைகள் இருப்பதால் மக்கள் தங்கத்தில் ஆர்வமாக முதலீடு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நமது நாட்டில் தற்போதுள்ள சட்டப்படி ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை.
நகைகளாகவோ, தங்க நாணயங்களாகவோ, தங்கப் பார்களாகவோ நாம் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு இந்தியாவில் சட்டங்கள் கட்டுப்பாடுகள் இல்லை.
ஆனால் CBDT எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் வரை ஆவணம் இல்லாமல் தங்கம் வைத்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் திருமணம் ஆகியிருந்தாலும் திருமணம் ஆகாவிட்டாலும் 100 கிராம் வரை மட்டுமே ஆவணம் இல்லாமல் வைத்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |