திருமணமான பெண்கள் ஒரு காலில் எத்தனை மெட்டி அணியலாம் தெரியுமா?
மெட்டி என்பது தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும்.
இது பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்பட்டிருக்கும். இத பழங்காலத்தில் ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது. தற்போது இதை பெண்கள் அணிந்து வருகின்றனர்.
இதை திருமணமான பெண்கள் ஒரு காலில் எத்தனை மெட்டி அணிய வேண்டும் ? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமணமான பெண்கள்
திருமணம் முடிந்ததும் காலில் மெட்டி அணியும் போது காலில் இருக்கும் ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.
ஒரே காலில் இரண்டு அல்லது மூன்று மெட்டி அணியும் போது உடல் நலத்திற்கு கேடு தருவதுடன் கணவனின் வளர்ச்சி பாதிப்படையும்.
வீட்டில் கோலம் போடும் பொழுது தெற்கு திசையை பாாத்தவாறு கோலம் போட கூடாது. கர்ப்பமான பெண்கள் உக்கிரமான தேவைதைகள் இருக்கும் கோவிலுக்கு போக கூடாது.
திருமணமான பெண்கள் குங்குமம் வைக்கும் போது கிழக்கு திசை நோக்கி இரண்டு புருவத்திற்கும் இடையில் உச்சந்தலையில் இட்டுக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் நூல் கயிற்றில் மட்டும் திருமாங்கல்யத்தை கோர்த்து கழுத்தில் அணிய வேண்டும். வெள்ளிக்கிழமை நாட்களில் பாகற்காய் சமைக்க கூடாது இதனால் எமக்கு பாவம் வந்து சேரும்.