வீட்டில் தயார் செய்யும் தயிரை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?
வீட்டில் தயாரிக்கும் தயிரை எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே நாம் அதிகமாக தயிர், மோர் இவற்றினை உணவில் எடுத்துக் கொள்கின்றோம்.
கடைகளில் வாங்கும் தயிரை விட, வீட்டில் நாம் தயார் செய்யும் தயிர் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கின்றது.
ஆனால் வீட்டில் தயார் செய்யும் தயிரை ப்ரிட்ஜில் அதிக நாட்கள் வைத்து சாப்பிடுகின்றோம். ஆனால் அவ்வாறு வீட்டில் தயாரிக்கும் தயிரை எத்தனை நாட்கள் வைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?
தயிரும் குறிப்பிட்ட தினங்களுக்கு பின்பு கெட்டுப்போய்விடும். ஆனால் இவை நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரியவதில்லை.
தயிரை அறை வெப்பநிலையில் சேமிப்பதை விட ப்ரிட்ஜில் சேமித்து வைப்பது சிறந்தது. அறை வெப்பநிலையில் 2 அல்லது 3 நாட்கள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் வெயில் காலத்தில் அதிக பாக்டீரியாக்கள் தயிரில் உருவாவதால் விரைவில் புளித்துவிடும். ஆனால் ப்ரிட்ஜில் வைக்கும் தயிரை 4 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் அதன் தரம் மற்றும் சுவை குறைந்துவிடும். ஆகையால் அறை வெப்பநிலையில் வைத்து இரண்டு நாட்களில் முடிப்பது சிறந்தது.
கெட்டுப்போனதை எப்படி கண்டுபிடிப்பது?
பொதுவாக தயிர் கெட்டுப் போய்விட்டதற்கான முதல் அறிகுறியே அதன் நிறம் ஆகும். நிறத்தில் மாற்றம், அதிலிருந்து அதிகளவில் புளிப்பு வாசனை ஏற்படும். இவ்வாறு இருந்தால் சாப்பிட வேண்டாம்.
அதுமட்டுமின்றி பிசுபிசுப்பாக மாறினாலும் தயிரை தவிர்க்க வேண்டும். கெட்டுப்போன தயிரை சாப்பிடுவதால் வயிறுவலி, அமிலத்தன்மை, வாயு பிரச்சனைகள் ஏற்படும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |