வீட்டில் செய்யும் தயிரை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?
நாம் வீட்டில் தயாரிக்கும் தயிரை எவ்வுளவு காலம் வைத்திருக்கலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
பொதுவாகவே எல்லார் வீட்டிலும் பயன்படுத்தும் ஒரு அத்தியாசிய பொருள் தயிர்.இது நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.தயிரை சிலர் மோராகவும்,அல்லது உணவில் சேர்த்து சாப்பிடுவார்கள்.
நாம் பலர் தயிரை கடையில் வாங்கி அதை குளிர்சாதனபெட்டியில் வைத்து நமக்கு தேவைப்படும் போது நாம் பயன்படுத்திக்கொள்வோம்.”
எத்தனை நாள் சாப்பிடுவது
சிலர் தயிரை வீட்டிலே செய்வார்கள் அப்படி செய்யும் போது அதை எவ்வுளவு நாள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் கெட்டுப்போனதை சாப்பிடுகிறார்கள்
நாம் வீட்டில் செய்யும் தயிரை இருக்கும் வெப்பத்தை விட அறை வெப்பநிலையில் சேமித்து வைப்பது நல்லது.
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தயிரை 2 முதல் 3 நாட்கள் மட்டும் பயன்படுத்துவது நல்லது,ஏனென்றால் வெயில் காலத்தில் பாக்டிரியாக்களினால் தயிர் சீக்கிரம் புளித்துவிடும்.
ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போதோ அதை 3 முதல் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.ஆனாலும் அதன் தரம் மற்றும் சுவை குறைந்துவிடும் என்பதால் அதை இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
எப்படி கண்டுபிடிப்பது
பொதுவாக தயிர் கெட்டுப்போவதற்கான அறிகுறிகளாக அதின் நிறம் மாறுதல்,அதிலிருந்து புளிப்பு வாசனை வருதல்,அது அதிகமாக பிரிய தொடங்கினாலோ அதை சாப்பிட வேண்டாம்.
இதையும் தவிர அது பிசுபிசுப்பாக மாறினாலும் தவிர்க்க வேண்டும்,இல்லையென்றால் அதை உண்பதன் மூலம் வயிற்று வலி,அமிலத்தன்மை,வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |