கோழி இறைச்சியை சமைத்து ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாமா? எச்சரிக்கை....!
நமக்குப் பிடித்த அல்லது சுவையான உணவுகளை அதிகமாக சமைத்து குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்கிறோம்.
ஆனால் சில நேரங்களில் சில உணவுகள் கெட்டுப்போவதற்கு அல்லது பாக்டீரியாவால் மாசுபடுவதற்கு பல வழிகள் உண்டு.
எனவே உணவினை குளிர்சாதன பெட்டியில் எவ்வளவு நேரம் வைக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சிக்கன்
கோழியில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்திருக்கிறது.
சிக்கன் உணவு சமைக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் காற்று புகாத டப்பாக்களில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இப்படி வைக்கும் போது மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை அதை நீங்கள் உட்கொள்ளலாம்.
அல்லது ஃப்ரீசரில் நீங்கள் இறைச்சியை உறைய வைத்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். சமைத்த உணவு 18 டிகிரி செல்சியஸ் முதல் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் வைக்கப்பட்டால் அது பாதுகாப்பானதாக இருக்கும்.
சமைத்த இறைச்சி அறை வெப்பநிலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தால், நீங்கள் அதை தூக்கி எறிய வேண்டும். அறை வெப்பநிலையில் மற்றும் குறிப்பாக 4°C / 40°F மற்றும் 60°C / 140°F இடையே பாக்டீரியாக்கள் வேகமாக வளர தொடங்கும்.
மீன் மற்றும் கடல் உணவு
மீன் மற்றும் கடல் உணவுகள் 2 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக இருக்கும்.
சிக்கன் அல்லது பன்றி இறைச்சியை விட கடல் உணவுகள் வேகமாக கெட்டுவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
அதனால்தான் குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது அதை கவனமாக கண்காணிக்க வேண்டும். காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால், சமைக்கப்பட்ட மீன் ஃப்ரிட்ஜில் 3 அல்லது 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கபட்ட மீன்களில் இருந்து கெட்ட வாசனை வீசினால், அதை உடனே தூக்கி எறியுங்கள். எனவே, மீன் மற்றும் கடல் உணவுகளை முடிந்தவரை பிரெஷ்ஷாக வாங்கி சமைத்து உண்ண முயற்சி செய்யுங்கள். பன்றி இறைச்சி போன்ற
சிவப்பு இறைச்சி
புதிதாக வாங்கிய பன்றி இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சியை சமைக்காமல் 5 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
இறைச்சி ஒருவேளை சமைத்ததாக இருந்தால், குளிர்சாதன பெட்டியில் 3 முதல் 4 நாட்கள் வரை வைக்கலாம்.
மாட்டிறைச்சி
மாட்டிறைச்சி போன்ற இறைச்சிகள் அதிகபட்சமாக 1 அல்லது 2 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் பிரெஷ்ஷாக இருக்கும்.
நீங்கள் இந்த இறைச்சியை உறைய வைக்க முடிவு செய்தால் அதை 3 முதல் 4 மாதங்கள் வரை ஃப்ரீசரில் வைக்கலாம்.