மூச்சிரைப்பு என்றால் என்ன? அது எப்படி பாதிப்பை வெளிப்படுத்தும்? நிபுணர் கொடுக்கும் விளக்கம்
பொதுவாக தற்போது இருக்கும் சூழல் மாசுக் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அநேகமானவர்கள் சுவாச கோளாறு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள்.
சுவாச பிரச்சினைகளில் மிகவும் முக்கியமானது தான் வீசிங் என்னும் மூச்சிரைப்பு.
இந்த பிரச்சனையை கொண்டவர்களுக்கு தூசி சிறிது மூக்கில் ஏறினாலும், அது மூச்சிரைப்பை தூண்டிவிடும். எனவே விசீங் நோயுள்ளவர்கள் சுத்தமான சூழலில் இருக்க வேண்டும்.
அந்த வகையில், ஒருவரை இக்கட்டான நிலைக்கு கொண்டு போகும் விசீங் பிரச்சினையால் ஒருவர் எப்படி பாதிக்கப்படுகிறார்? வீசிங் வருவதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது பற்றி தொடர்ந்து பதவில் பார்க்கலாம்.
மூச்சிரைப்பு என்றால என்ன?
மூச்சிரைப்பு (Wheezing) என்பது சுவாசிக்கும் போது கேட்கக்கூடிய விசிலடிப்பது போன்ற சத்தமாகும். இதனை ஸ்டெதஸ்கோப் மூலமாக தான் கேட்க முடியும். இந்த நோய் தீவிரமானால் அதனை ஸ்டெதஸ்கோப் இல்லாமல் கேட்க முடியும்.
இது, சுவாசப்பாதையை பாதிக்கிற சில நோய் தொற்றுக்களின் காரணமாக சுருங்கி குறுகலாகும் போது மூச்சிரைப்பு ஏற்படுகிறது. அத்துடன் அந்நிய பொருளானது ஒரு குறிப்பிட்ட சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தியிருந்தாலும் சிலருக்கு ஏற்படும்.
மூச்சிரைப்புக்கான காரணங்கள்
1. மூச்சிரை ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக ஈளை நோய் எனப்படும் ஆஸ்துமா பார்க்கப்படுகின்றது.
2. மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுக்குழாய் விரிவு, மூச்சுநுண்குழாய் அழற்சி, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), காற்றுப்பாதையில் உள்ள அந்நிய பொருள் போன்றவை மூச்சிரைப்பிற்கான பிற காரணங்களாக பார்க்கப்படுகின்றது.
3. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்புநோய் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தி மார்பு இறுக்கம் மற்றும் இருமலை ஏற்படுத்தும்.
4. மூச்சிரைப்பு பிரச்சனை ஆஸ்துமாவின் ஆரம்பமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள்.
சிகிச்சை அளிப்பது எப்படி?
1. குறுகிய கால நிவாரண சிகிச்சை
- வழக்கமாக சல்பூட்டமால் / லெவோசல்புடமால் இன்ஹேலரின் மூலம் சிகிச்சை கொடுத்தல்.
- மாண்டெலுகாஸ்ட் மற்றும் ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்து வில்லைகளை மருத்துவர் பரிந்துரையுடன் எடுத்து கொள்ளலாம்.
- வீசிங் நோயாளிகள் இருக்கும் பொழுது வீட்டில் வலுவான வாசனை / தூசி / புகை / சமையலறையின் புகை மற்றும் ஆவிகள் /அல்லது நாற்றமடிக்கும் அறைகள் உள்ளிட்டவைகளை சுத்தமாக வைத்து கொள்வது சிறந்தது.
- தொடர்ந்து மூச்சிரைப்பு அதிகமானால் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இன்ஹேலரை பயன்படுத்தலாம்.
- மருத்துவர்களிடம் ஆலோசனை எடுத்து கொண்ட பின்னர் மற்றைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |