இந்த அறிகுறிகளை கண்டால் ஜாக்கிரதை! வீட்டில் கெட்டது நடக்க போகுதுன்னு அர்த்தம்
ஜோதிட சாஸ்திரம் மற்றும் இந்து சாஸ்திரதின் பிரகாரம் கண்திருஷ்டி மற்றும் கெட்ட சகுணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
திருஷ்டியில் மோசமானது கண் திருஷ்டி என குறிப்பிடப்படுவதற்கு காரணம் இதனால் ஒரு மனிதனை முழுமையாக வீழ்த்த முடியும் என்பதாகும்.
கண் திருஷ்டியை போக்குவதற்காக பலரும் திருஷ்டி கழிப்பு, திருஷ்டி பொம்மைகளை வைத்திருக்கும் வழக்கம் காணப்படுகின்றது.
அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நல்ல சக்திகளை ஈர்க்க உதவுகின்றது.அப்படி வீட்டில் கெட்ட விடயங்கள் நடக்கப்போவதை உணர்த்தும் அறிகுறிகள் தொடர்பாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கெட்ட சகுணங்கள்
உங்கள் வீட்டை சுற்றி அடிக்கடி நாய்கள் அழுவது மிகவும் மோசமான அசுப அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. வீட்டை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருப்பதையே அது உணர்த்துகின்றது. மேலும் வீட்டில் ஏதோ கெட்டது நடக்க இருப்பதை முன்கூட்யே எச்சரிப்பதாகவும் இது அமைகின்றது.
வீட்டில் பூஞ்சை பிடிப்பதும் கெட்ட அறிகுறியாகும். இவ்வாறு காணப்பட்டால் விரைவில் நீங்கள் கஷ்டப்பட போகிறீர்கள் என்று அர்த்தம். எனவே வீட்டை உடனடியாக சுத்தம் செய்வதுடன் இறை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மேலும் அதிகாலை 3 மணி நேரங்களில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்துக்கொள்கின்றீர்கள் என்றால் எதிர்மறை ஆற்றகள் உங்களை சூழ்ந்து காணப்டுவதாக அர்த்தம். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் கடவுளை வணங்கிய பின்னரே மீண்டும் தூங்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |