உங்க ஆளுமையை அதிகரிக்கணுமா? இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க
பொதுவாகவே அனைவருக்கும் தங்களை மற்றவர்கள் மத்தியில் சிறப்பானவர்களாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
நம்மை மற்றர்கள் எந்தளவுக்கு மதிக்கின்றார்கள் என்பது நமது நடத்தை, ஆளுமை, பேச்சு மற்றும் உடல் மொழிகள் ஆகியவற்றில் தான் தங்கியுள்ளது.
எனவே மற்றவர்கள் மத்தியில் நீங்கள் எப்போதும் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் தோற்றமளிக்க பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆளுமையை அதிகரிக்க முக்கிய tips
பொதுவாக நாம் பயத்தில் இருப்பதையும் பதற்றத்தில் இருப்பதையும் நமது உடல் மொழிகள் அப்பட்டமாக வெளிப்படுத்திவிடும். எனவே பொது இடங்களின் இருக்கும் போது உடல் மொழிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
தோள்பட்டைகளை தளர்வாக வைத்துக்கொள்ளாமல் சற்று நேராக நிமிர்ந்து நிதானமாக இருப்பது உங்களை சிறந்த தோற்றத்தில் வெளிக்காட்ட பெரிதும் துணைப்புரியும்.
பயம் அல்லது பதற்றம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு என்போதும் சிறு புன்னகையுடன் இருப்பது மேலும் உங்கள் ஆளுமையை அதிகரிக்கும்.
மற்றவர்களின் கண்களை பார்த்து பேசுவது , தங்களது கருத்துக்களை வலிமையாக தொனியில் கூறுவது போன்ற அனைத்துமே நமது தகுதியை உயர்த்திக்காட்டும் விடயங்களாகும்.
பொது இடங்களில் அல்லது நேர்காணலில் இருக்கும் போது தளர்வான உடலுடன் குணிந்து இருக்காமல், நிமிர்ந்து தன்னம்பிக்கையுடன் இருப்பது நிறந்த ஆளுமையை வெளிப்படுத்த உதவும்.
முகத்தில் வெளிப்படுத்தும் உணர்வுகளை எப்போதும் சமநிலையில் வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.அதுவும் உங்கள் ஆளுமையை சிறப்பித்து காட்டும் மிகச்சிறந்த உத்தியாகும்.
மற்றவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டு பின்னர் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இது பிறரை ஈர்க்கும் ஒரு சிறந்த முறையாகும். இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால் உங்கள் ஆளுமை நிச்சயம் உயரும்.
பெரும்பாலானவர்களுக்கு மற்றவர்களுடன் பேசும் போது கைகளை அசைத்து பேசும் பழக்கம் இருக்கும்.அதனை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும் அதிமாக உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் போது மற்றவர்களின் கவனம் திசைத்திரும்பவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
உங்கள் கருத்துக்கனை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றால் பேரும் போது மிகவும் நிதானமான பேச வேண்டும் மேலும் நெருங்கியவர்கள் என்றால் அடிக்கடி அவர்களின் பெயரை உபயோகித்து பேசுவது உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்க செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |