உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்ன்னு சொல்றோம்...
December Numerology Prediction: உங்களது பிறந்த தேதியை வைத்து டிசம்பர் மாத பலனை தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் ஒருவரது ராசி மற்றும் நட்சத்திரத்தினை வைத்து எதிர்காலத்தை கணிக்கும் நிலையில், பிறந்த தேதியையும் வைத்து பலன்களை கணிக்க முடியும்.
வருடத்தின் கடைசி மாதமாக இருக்கும் டிசம்பர் மாதத்தின் பலனை பிறந்த தேதியை வைத்து தெரிந்து கொள்வோம். அதாவது உங்களது பிறந்த தேதியை வைத்து டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

எண் 1
1, 10, 19, 28 இந்த தேதியில் பிறந்தவர்களின் எண் 1 ஆகும். இதில் பிறந்தவர்கள் தொழில் மற்றும் வேலையில் டிசம்பர் மாதத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
பணி செய்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்ப்பதுடன், அலுவலகத்தில் உங்களது திறமைக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், பதவி உயர்வு கிடைக்கும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதுடன், நிதி நிலையும் மேம்படும். வருமானம் அதிகமாகுமாம்.
எண் 2
2, 11, 20, 29 எண் 2ஐ கொண்டவர்கள் டிசம்பர் மாதத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதுடன், வேலை தேடுபவர்கள் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வருமான வழிகள் உருவாவதுடன், நிதி நிலையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், குடும்பத்தில் அன்பும், புரிதலும் அதிகமாகும்.
எண் 3
3, 13, 21, 30 எண் 3ஐ ஆதிக்கமாக கொண்டவர்கள் டிசம்பர் மாதம் சாதகமான இருக்குமாம். வேலை மற்றும் தொழிலில் புதிய சாதனைகளை படைக்கும் வாய்ப்பு உருவாகும்.
அலுவலகத்தில் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கலாம். தொழிலாளர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். நிதி நிலை மேம்படும்.

எண் 4
4, 13, 22, 31 எண் 4ஐ ஆளுமை எண்ணாக கொண்ட இவர்களுக்கு டிசம்பர் மாதம் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக முயற்சித்த வேலைகள் வெற்றியாக முடியும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.
நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், நிலுவையில் இருந்த வேலைகள் இந்த மாதத்தில் முடிவடையும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் நிதி ஆதாயம் கிடைக்குமாம். வேலையில் எதிர்பார்த்த மாற்றத்தினை செய்ய இது சரியான நேரமாகும்.
வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக அமைவதுடன், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பீர்கள்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதியில் பிறந்தவர்கள், டிசம்பர் மாதத்தில் பல்வேறு விடயங்களில் சாதகமான மாற்றத்தினை பெறுவீர்கள்.
நிதி நிலை மேம்படுவதுடன், தேவையான வசதிகளும் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான வழியும் கிடைக்கும்.

எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதிய விடயத்தினை கற்றுக்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள இவை ஏற்ற காலமாக இருக்கும்.
உங்களது தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான அதிக ஆர்வம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப்பிரச்சனை படிப்படியாக குறையுமாம். குடும்பத்தினருடன் அதிகமான நேரம் செலவழிப்பீர்கள்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் தங்களது உழைப்பினையும், திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். பணம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பினையும் பெறுவீர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காமல் பொறுமையுடன் திட்டமிடுவது அவசியம் ஆகும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் உற்சாகமும், புதிய வாய்ப்புகளும் நிறைந்த மாதமாக இருக்கும்.
வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே திட்டமிட்ட முயற்சிகளை செயல்படுத்தினால் நல்ல லாபம் பெறலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |