அசிடிட்டியை அடித்து விரட்ட ஓமம்... எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் பயன்படுத்தப்படுகிறது.
ஓமத் தண்ணீர் என்றே ஒரு மருந்து மளிகை கடைகளில் வைத்திருப்பார்கள்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் கொடுப்பார்கள்.
ஓமத்தில் மிக அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதோடு மினரல்களும் வைட்டமின்களும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்திருக்கின்றன.
அசிடிட்டி தொல்லை நீங்க ஓமத் தண்ணீர்
வீட்டிலேயே நாம் ஓமத் தண்ணீரை தயார் செய்து குடிக்க முடியும்.
ஒரு ஸ்பூன் ஓமத்தை எடுத்து வெறும் வாணலியில் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதை மிக்சியில் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த பொடியை ஒரு காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.
வாயுத்தொல்லை முதல் அசிடிட்டி இருக்கும்போது சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீர் ஒரு கிளாஸ் எடுத்துக் கொண்டு அதில் இந்த பொடியை அரை ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து குடிக்க, ஒரு மணி நேரத்தில் உங்களால் மாற்றத்தினை உணர முடியும்.