Sunday வீட்டில் இருக்கீங்களா ?சமையலை இலகுவாக்க சில சமையல் குறிப்புகள் இதோ
நாள் முழுக்க வேலை செய்யும் இல்லதரிகளுக்காக சமையலை இலகுவாக்கக்கூடிய சில உத்திகளை பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
ரசம் மிகவும் வாசமாக இருக்க சிறிதளவு நெய்யில், கடுகுடன், ஐந்து முழு மிளகை சேர்த்து தாளித்தால், ரசம் நல்ல மணத்துடன் இருக்கும்.
பன்னீர் பட்டர் மசாலா செய்யும் போது இஞ்சி, வெங்காய விழுதை நன்றாக கிளறியதும், முந்திரி, கசகசா தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்த விழுதை கலந்து செய்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்த்து இட்லி மாவு அரைத்தால், மாவு சீக்கிரம் புளிக்காமல் நன்றாக இருக்கும். அடைக்கு மாவு அரைக்கும் போது அரை கப் சிறு பயிறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து செய்தால் ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் சத்தாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |