Vastu Tips: உங்கள் வீட்டில் பீரோ சரியான திசையில் இருக்கிறதா?
என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் வருமானம் வீட்டில் தங்கவில்லையே என்ற கவலை பலருக்கும் இருக்கும்.
கடன் பிரச்சனை, தொடர்ச்சியான தேவையில்லாத செலவுகள் என பலவிதமான பிரச்சனைகள் வந்துசேரும்.
தொழிலில் வருமானமே வந்தாலும் சேமிக்க முடியாமல் விரையம் ஆகிறதே என பல குழப்பங்களும் இருக்கும்.
எதனால் இப்படி? நாம் என்ன தவறு செய்துவிட்டோம்? ஒருவேளை வீட்டின் அமைப்பு அப்படி இருக்குமோ? என்றெல்லாம் யோசிப்போம்.
இதற்கெல்லாம் பதிலாகிறது இந்த பதிவு,
ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்கவில்லையென்றால் அங்கு எதிர்மறையான ஆற்றல் நிறைந்திருக்கிலாம், அல்லது நமக்கே தெரியாமல் தவறான செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கலாம்.
நாம் கவனிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரத்தை தான், நேர்மறை ஆற்றலை எப்படி கொண்டு வருவது என்பதை தான்.
மிக முக்கியமாக வீட்டின் பீரோ சரியான திசையில் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.
சரியான திசையில் இருந்தால் எதிர்மறை ஆற்றல் மறைந்து, நேர்மறை சக்தியுடன் பணத்தை மேலும் மேலும் கொண்டு வந்து சேர்த்துவிடும்.
வாஸ்துபடி வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என மொத்தம் எட்டு திசைகள் உள்ளன.
சாஸ்திரப்படி நிருதி மூலை என்றழைக்கப்படும் தென்மேற்கு பகுதியில் பீரோவை வைப்பதே சிறந்தது.
அதாவது தெற்கு ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்கு பக்கம் திறப்பதுமாக வைக்க வேண்டும், இப்படி வைத்தால் வீட்டின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
ஒருவேளை இந்த திசை இல்லாத பட்சத்தில் வடமேற்கு மூலையில் வைக்கலாம், மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே கிழக்கு நோக்கி வைக்கலாம்.