அழகிய வீடாக மாற்றுங்கள்!
By Sinduja
ஒருவரின் வீட்டை வைத்துத்தான் அவர்கள் எந்தளவு சுத்தத்தை பேணுகிறார்கள் என்பது ஏனையவர்களுக்கு தெரியும்.
வீடானது வெறுமனே கல்,மண்ணைக் கொண்டு கட்டப்பட்ட சடப்பொருள் அல்ல. அது குடும்பமாய் இன்பமாக, ஒற்றுமையாக வாழும் ஒரு இடமாகும்.
அந்த இடத்தை எவ்வாறு வைத்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். வீடு அமைதியானதாக இருக்க வேண்டும் என்றாலும் அழகானதாகவும் இருக்க வேண்டும்.
அதற்கான சில டிப்ஸ்...
- புதிதாக யாரேனும் வீட்டுக்கு வரும்போது முதலில் அவர்களின் கண்களில் படுவது வரவேற்பறைதான். எனவே அதை மிகவும் நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும்.
- வீட்டை அழகுபடுத்துவதில் முதலிடம் வகிப்பது வர்ணப் பூச்சுக்கள் தான். அதை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- வர்ணப் பூச்சுக்களுக்குப் பின்னர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது வீட்டின் திரைச்சீலைகள். வர்ணங்களுக்கு ஏற்ப வீட்டின் திரைச்சீலைகள் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
- சுவர்களை மேலும் அழகுப்படுத்த வேண்டுமாயின் பெரிய அழகிய ஓவியங்களை சுவர்களில் தொங்கவிடலாம்.
- அதேபோல் இருக்கைகளும் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
- பச்சை நிறம் என்பது மிகவும் குளிர்மையானது. வீட்டைச் சுற்றி செடிகளைக் கொண்டு அலங்கரிக்கலாம்.
- சின்னச் சின்ன பொருட்களை வீடெங்கிலும் வைத்து அழகுபடுத்தலாம்.
- வித்தியாசமான கடிகாரங்களை தொங்கவிடலாம்.
- தரைக்கும் சிறந்த வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புக்களை தேர்ந்தெடுக்கலாம்.
இவ்வாறு சின்னச் சின்ன விடயங்கள் நமது அமைதியான வீட்டை அழகாகவும் காட்டும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US