24 மணிநேரம் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தால் இவ்வளவு பக்க விளைவுகளா? இனி ஜாக்கிரதை!
பல நூற்றாண்டுகளாக உண்ணாவிரதம் என்பது பல கலாச்சாரங்களில் முக்கிய அம்சமாக உள்ளது. உண்ணாவிரதம் என்பது அனைத்து வகையான உணவுகள் மற்றும் பானங்களை உண்ணாமல் தவிர்ப்பது ஆகும். உண்ணாவிரதத்தை பொறுத்தவரை பல வகையான உண்ணாவிரதங்கள் உண்டு. அவற்றில் 24 மணி நேரம் அதாவது ஒரு நாள் முழுக்க உண்ணாமல் இருப்பதும் ஒரு வகையாகும்.
அப்படி ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து கொலம்பியா ரெஃபரல் மருத்துவனையின் தலைமை உணவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். விரதம், நோன்பு போன்றவற்றை கடைப்பிடிப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கலாம்.
விரதங்களின் போது உடல் எடை குறையும் என பலர் நம்புகின்றனர். ஆனால் அதை நிரூபிக்க எந்த வித ஆதாரங்களும் இல்லை என்பதே உண்மை. எனவே எடை இழப்பை பெற உண்ணாவிரதம் இருப்பது சரியான யோசனை கிடையாது. உடல் எடையை குறைக்க தினசரி உடற்பயிற்சி செய்வதே சரியான தேர்வாகும்.
மேலும் தினமும் சீரான உணவை உண்ண வேண்டும். அதிக நேரம் உண்ணாவிரதம் இருப்பது தலைவலியை ஏற்படுத்தும். உண்ணாவிரதம் இருக்கும்போது அந்த நாளின் முடிவில் நீங்கள் மயக்கத்தை உணர வாய்ப்புள்ளது. அல்லது மறு நாள் காலையில் கடுமையான தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
உடலில் எந்த சக்தியும் இல்லாதது அல்லது சத்துக்கள் குறைப்பாடு காரணமாக இது நிகழ்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலும் கார்போஹைட்ரேட்களே உள்ளன. இதிலிருந்து உருவாகும் ஆற்றலே உடல் உறுப்புகள் மற்றும் மூளைக்கு சக்தியளிக்கின்றன. மேலும் அவை சீராக செயல்பட உதவுகிறது.
உண்ணாவிரதம் காரணமாக உடலில் கார்போஹைட்ரேட்கள் குறைப்பாடு ஏற்படுகிறது. இதனால் உடலுக்கும் மூளைக்கும் சரியான சக்தி கிடைப்பதில்லை. இதனால் தான் உண்ணாவிரதத்தின் போது தலைவலி ஏற்படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
எனவே ஊட்டச்சத்துக்காக கல்லீரலில் உள்ள குளுக்கோஸ் அல்லது க்ளைகோஜன் அதிகப்படியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் உண்ணா விரதத்தின் போது தண்ணீர் குடிக்காதது காரணமாக உடலில் நீரின் அளவு குறைகிறது.
இது உடலின் இயல்பு செயல்ப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இவை உடல்நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.