சுடு சோற்றில் Dark chocolate, முட்டை- இணையவாசிகளின் வெறுப்பை சம்பாதித்த Video
சுடு சோற்றுடன் சாக்லேட், தக்காளி, முட்டை செய்யப்பட்ட வித்தியாசமான உணவு காணொளியொன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் உணவு இல்லாமல் பல கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். என்ன தான் அரசாங்கம் தங்களால் முடிந்த உதவிகளை செய்தாலும், அவர்களின் இழப்பை யாராலும் மீட்டு தர முடியாது.
அப்படி இருக்கும் பட்சத்தில் இணையத்தில் வித்தியாசமான முறையில் உணவு தயாரிக்கும் காணொளியொன்று வைரலாக்கப்பட்டு வருகிறது.
சாப்பாட்டை வெறுக்க வைத்த காணொளி
அந்த வகையில் காணொளியில், சுடு சோற்று அடுப்பில் இருக்கிறது. அதனுடன் டார்க் சாக்லெட், முட்டை, பால், ஜுஸ், தக்காளி சாஸ் மற்றும் சீனி ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு ஒரு உணவு தயாரித்துக் காட்டுகிறார்கள்.

இது போன்று யாரும் சமைத்து சாப்பிடுவார்களா? என்ற சந்தேகம் இணையவாசிகளுக்கே எழுந்துள்ளது. சுமாராக ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைக்கு சென்றுள்ளது.
இறுதியாக சோற்றை கிளறி எடுக்கும் பொழுது உலகிலேயே மோசமான சாப்பாடு இது தான் என நினைக்க வைக்கிறது. இந்த காணொளிக்கு இணையவாசிகள், “ தயவு செய்து சாப்பாட்டை வீணாக்க வேண்டாம்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |