பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊற வைக்கும் ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஆம்லெட்! 10 நிமிடங்களில் செய்யலாம்..
பொதுவாக வீடுகளில் ஆம்லட் செய்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதன்படி, முட்டையை வைத்து ஆம்லெட், ஆப் ஆயில், பொரியல், அவித்த முட்டை என பல வகைகளைகளில் தயாரிக்கலாம்.
அந்தவகையில் ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஆம்லெட் எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 3
சிக்கன் கொத்துக் கறி மசாலா - 100 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2
தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தயாரிப்பு முறை

முதலில் ஆம்லட்டுக்கான வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் சிக்கனை கொத்துக் கறி மசாலா சேர்த்து பிய்த்து வைக்க வேண்டும்.
இதனையடுத்து ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் முட்டையை என்பவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டது. அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
இதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி மெதுவாக சூடானதும் அதில் கலந்து வைத்திருக்கும் முட்டை ஊற்றி மிதமான சூட்டில் பாதியளவு முட்டையை வேகவிடவும்.
இதனுடன் நாம் பிய்த்து வைத்திருக்கும் சிக்கனை மேலே தூவி இறக்கினால் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஆம்லெட் தயார்!