ஆரோக்கியமான சுலபமான பன்னீர் நகட்ஸ் வீட்டிலேயே எப்படி செய்யலாம்?
வீட்டில் உடனடியாக விருந்தினர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு எதாவது சிறப்பாக செய்து கொடுக்க நினைப்போம். ஆனால் அந்த நேரத்தில் சுவையாகவும் சுலபமாகவும் என்ன செய்யலாம் என்பதில் பல குழப்பம் இருக்கலாம்.
அப்படியான குழப்பத்திற்கு வழியாக தான் இன்று மொறு மொறு பன்னீர் நகட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானவை
- டோஃபு பன்னீர் - 400 கிராம்
- கார்ன் ஃப்ளார் மாவு - தேவைக்கேற்ப
- மைதா மாவு - தேவைக்கேற்ப
- பிரட்தூள் - தேவையான அளவு
- இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- ரெட் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
- சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
- மிளகுத் தூள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் டோஃபு பன்னீரை சதுர வடிவில் நறுக்கவும். ஒரு பாத்திரம் எடுத்து நறுக்கி வைத்துள்ள டோஃபு பன்னீர், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் இதை 15 நிமிடம் ஊறவிடவும். அடுத்து ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி மைதா மாவு, மற்றொரு தட்டில் பிரட் தூள்கள், ஒரு பவுளில் கார்ன்ஃப்ளார் மாவுவை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும்.
டோஃபு பன்னீர் 15 நிமிடங்கள் ஊறிய பின்னர் முதலில் மைதா மாவில் டிப் செய்து பின்னர் அதை கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்து அடுத்து அதை பிரட் தூளில் பிரட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் காய வைக்கவும்.
இப்போது கடாய் எடுத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய வைத்த டோஃபு பன்னீரை போட்டு எடுத்தால் சுவையான டோஃபு பன்னீர் நகட்ஸ் ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |