ஹோட்டல் அறைகளில் ஏன் 13ம் நம்பர் இருப்பதில்லை? பின்னணியில் இருக்கும் ரகசியம் இதுதான்
பெரும்பாலான ஹோட்டல்களில் அறை எண் 12ம் நம்பருக்கு பின்பு 14ம் நம்பர் அறை இருப்பதை கவனித்திருப்பீர்கள்... ஆனால் 13ம் எண் இல்லாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
13ம் அறை இருப்பதில்லை ஏன்?
நீங்கள் பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் 13 என்ற எண்ணை பயன்படுத்துவதில்லை. 12ம் நம்பருக்கு பின்பு 14ம் நம்பர் அறை இருக்கும்.
அவ்வாறு இல்லையெனில் 13ம் எண்ணிற்கு பதிலாக வேறு ஒரு எண் இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதற்கான காரணம் பலருக்கும் தெரிவதில்லை.
இதற்கு முக்கிய காரணம் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒருவித பயம் தான் என்று கூறப்படுகின்றது. தற்போது உலகளவில் நீங்கள் காணும் இந்த மர்மத்திற்கான பின்னணியை தெரிந்து கொள்வோம்.

13க்கு பதில் பயன்படுத்தப்படும் எண்
பெரும்பாலான விருந்தினர்கள் பயத்தின் காரணமாக பலரும் 13 என்ற எண் கொண்ட அறையில் தங்க விரும்புவதில்லையாம். இதனால் குறித்த அறை காலியாக இருந்தால் ஹோட்டல் நஷ்டம் ஏற்படும்.
குறித்த நஷ்டத்தினை தவிர்ப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் 13 என்ற அறை எண்ணிற்கு பதிலாக 12A, 14 அல்லது 'M' என்ற எழுத்தை பயன்படுத்துகின்றனர்.
M என்ற ஆங்கில எழுத்தை பயன்படுத்துவதற்கு காரணம் ஆங்கில எழுத்துக்களில் 13வது எழுத்து என்பதாகும்.'

ஆனால் அறிவியல் மொழில் 13 என்ற எண்ணின் மீதான பயத்தினை ட்ரிஸ்கைடெகாஃபோபியா என்று கூறுகின்றனர். அதாவது துரதிர்ஷ்டவசமான அல்லது கெட்ட சகுனமாக கருதுவது ஆகும். இதனால் தான் நூற்றாண்டுகள் கடந்தும் இந்த பழமையான நம்பிக்கை மக்களுடன் இன்னும் தொடர்கின்றது.
மேலும் நார்ஸ் புராணங்களின்படி, ஒரு விருந்திற்கு 13வதாக விருந்தாளியால் பெரும்சோகம் நடந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் ஆசிய நாடுகளில் 4 மற்றும் 9 ஆகிய எண்கள் ராசியில்லாத எண்களாக கருதப்படுகின்றது.
என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து சென்றாலும் மக்களின் இம்மாதிரியான நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |