மணக்க மணக்க அருமையான சுவையில் குழம்பு தூள் வீட்டிலேயே செய்வது எப்படி?
மசாலாப்பொருட்களை முற்காலத்தில் எல்லாம் வீட்டிலேயே செய்து பயன்டுத்துவார்கள். இது உணவின் சுவையை மேன்படுத்தவும் சுவையை அதிகரிக்கவும் உடலுக்கு மருந்தாகவும் பயன்படகிறது.
நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கிராம்பு- வெல்லம் கசாயம்.. ஒரு தடவை குடிச்சு பாருங்க- பலன் நிச்சயம்
நாம் தயாரிக்கும் உணவில் தசாலாப்பொருட்கள் நன்றாக இருந்தால் தான் அதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். பல கடைகளில்
பலவிதங்களில் கிடைக்கும் மசாலாக்களை விட இந்த இந்த மசாலா வீட்டிலெயே செய்வதால் உணவின் சுவை அதிகரிப்பதோடுஉடலுக்கு ஆரோக்கியதாகவும் இருக்கும். எனவே இந்த மசாலாப்பொருட்களை எப்படி செய்ய வெண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முழு மல்லி - 2 கிலோ
- சோம்பு - 400 கிராம்
- சீரகம் - 400 கிராம்
- மிளகு - 200 கிராம்
- விரலி மஞ்சள் - 200 கிராம்
- மிளகாய் தூள் தயாரிக்க
- காய்ந்த மிளகாய் - 1 கிலோ
- காஷ்மீரி மிளகாய் - 1 கிலோ
செய்முறை
முதலில், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து, தூசி நீக்கவேண்டும். அதன்பிறகு,மிளகாய்களை சுத்தம் செய்து, காம்புகளை நீக்கவேண்டும்.
அதன்பின்னர் சுத்தம் செய்த அனைத்து பொருட்களையும் தனித்தனியாக தட்டுகளில் பரப்பி, வெயிலில் நன்கு காய வைக்கவும். விரலி மஞ்சளை சிறிய துண்டுகளாக உடைத்து காய வைக்கவும்.
காய்ந்த பொருட்களை இரண்டு பகுதிகளாக அரைக்க வேண்டும். முதலில், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து, நைசான பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதுவே சுவையான குழம்பு தூள்.
இரண்டாவதாக, காய்ந்த மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து, மிளகாய் தூளாக எடுத்துக் கொள்ளவும். காஷ்மீரி மிளகாய் சேர்ப்பதால் குழம்புக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
இப்போது, குழம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் இரண்டும் தயாராக உள்ளன. இவற்றை ஒன்றாகக் கலக்கத் தேவையில்லை. குழம்பு செய்யும்போது, தேவைக்கேற்ப குழம்பு தூளையும், மிளகாய் தூளையும் சேர்த்துக்கொள்ளலாம். இதன் பின்னர் நீங்கள் செய்யும் குழம்பிற்கு சேர்த்தால் சுவை பிரமாதம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |