கொத்துக்கணக்கில் மல்லிகை பூ பூக்கணுமா? உரத்தில் இந்த 3 பொருள் சேர்த்தா போதும்
வீட்டில் இருக்கும் மல்லிகை செடி கொத்து கொத்தாக பூக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் உரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ன சேர்க்க வெண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மல்லிகை பூ செடி
சிலருக்கு மல்லிகை பூ என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த செடிகள் எல்லாம் ஒரே போல பூக்காது. சில செடிகள் பல வருடங்களாகியும் பூக்காது.
இதற்கு கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு ஒரு சக்திவாய்ந்த உரத்தை தயாரிக்க உங்களுக்கு நாங்கள் சொல்லி தருகிறோம்.
மல்லிகைச் செடிக்கு உரம் போடும்போது, அது நேரடி சூரிய ஒளியில் இருப்பது அவசியம்.
உரம் போடுவதற்கு முன்பு, மல்லிகைச் செடியின் அனைத்து நுனிகளையும் வெட்டி விடுங்கள். இது புதிய கிளைகள் வளர உதவும், இதன் விளைவாக அதிக பூக்கள் பூக்கும்.
உரத்திற்கு 5 ஸ்பூன் வெந்தயம் 3 ஸ்பூன் உளுந்து தோலுடன் 1 ஸ்பூன் கடுகு மூன்று பொருட்களையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.செடி சிறியதாக இருந்தால் அரை ஸ்பூன், பெரியதாக இருந்தால் ஒரு ஸ்பூன் பொடியை பயன்படுத்தலாம்.
இந்த செயலை தொடர்ந்து 20 நாட்களுக்கு செய்து வந்தால் செடி கொத்து கொத்தாக பூத்து குலுங்கும். இந்த உரம் போட்டதன் பின்னர் செடிக்கு நன்றாக தண்ணீர் ஊற்றவும். இப்படி பராமரித்தால் பூக்காத மரமும் பூக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |