வாரம் 2 தடவை போடுங்க.. கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாகும்!
தற்போது நிறைய பேருக்கு இருக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள். இந்த புள்ளில் மூக்கின் மேல் அல்லது கன்னங்களில் இருக்கும்.
அதிகப்படியான எண்ணெய் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது. இந்த கரும்புள்ளிகள் சருமத்தின் மென்மைத்தன்மையை பாதிப்பதோடு, சரும அழகையே மோசமாக்கி விடும்.
அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்ய நினைப்பவர்கள் ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க்குகளை விட, ஃபேஸ் ஸ்க்ரப்புகள் செய்து போடலாம். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி முகத்தை பொலிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல், சருமத்துளைகளை சுத்தம் செய்து, கரும்புள்ளிகளை இல்லாமல் செய்கிறது.
சிலருக்கு வயது மூப்பு காரணமாக சருமத்தில் சுருக்கங்கள் இருக்கும். அப்படியான பிரச்சினையுள்ளவர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்க்ரப்புகளை வாங்கி பயன்படுத்துவதை விட வீடுகளில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ஸ்க்ரப்பு தயார் செய்யலாம்.
ஏனெனின் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்க்ரப்புகளை தொடர்ந்து பயன்படுத்தினால் எரிச்சல், அரிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
அந்த வகையில், கரும்புள்ளிகளை வேறூடன் எடுக்கும் ஸ்க்ரப்பு எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை + உப்பு
- எலுமிச்சை சாறு, உப்பு இரண்டையும் கலந்து ஃபேஸ் ஸ்க்ரப் போன்று செய்து கொள்ளவும்.
- பின்னர், முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு, ஸ்க்ரப்பை மெதுவாக முகத்தில் தடவி, மசாஜ் செய்யவும்.
- ஸ்க்ரப் நன்றாக காய்ந்த பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
- இப்படி வாரத்திற்கு 2 தடவை செய்து வந்தால் முகத்திலுள்ள அழுக்குகள் அகன்று சருமம் பார்ப்பதற்கு பிரகாசமாக இருக்கும்.
சந்தன பவுடர் + பால் ஸ்க்ரப்
- ஒரு பௌலில் சந்தன பவுடர், ஜாதிக்காய் பவுடர் இரண்டையும் போடவும். அதில் பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- அதன் பின்னர், முகத்தைக் கழுவி துடைத்துவிட்டு, கலந்து வைத்திருக்கும் பேக்கை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர், கைகளை நீரில் நனைத்து, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
- இப்படி தினமும் செய்து வந்தால் சருமத் துளைகள் சுருங்கி, கரும்புள்ளிகள் வருவதும் குறையும்.
பட்டை + தேன்
- ஒரு பௌலில் பட்டை பொடியை எடுத்து, தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- அதனை முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
- ஸ்க்ரப் செய்து காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை கழுவ வேண்டும்.
- இப்படி வாரத்திற்கு 2 தடவைகள் செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |