உளுந்துடன் இத சேர்த்து அரைச்சு போடுங்க.. செம கலர் வரும்
ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக சருமத்தை பற்றிக் கவலைக் கொள்வார்கள்.
மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் சுற்றுசூழல் மாசு காரணமாக பெண்களுக்கு அதிகமாக சரும பிரச்சினைகள் வரும். இதனால் அவர்களின் அழகே மாறி விடும்.
சிலர் வெயில் காரணமாக கருப்பாக மாறி விடுவார்கள். அப்படியானவர்கள் இழந்த சிவப்பு அழகை மீண்டு பெறலாம். முக அழகை கெடுக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், கருவளையங்கள் போன்ற பிரச்சினைகளால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள்.
இவற்றை இல்லாமல் செய்வதற்கு என்ன தான் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும், வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் செய்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
அந்த வகையில், முகம் ரொம்ப கருப்பாக உள்ளது என கவலையில் இருப்பவர்கள் உளுந்தம் பருப்புடன் சில பொருட்களை சேர்த்து அரைத்து தினமும் போடலாம்.அப்படியாயின், உளுந்து பேஸ் பேக் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து மாவு- ஒரு ஸ்பூன்
- தேன்- முக்கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் பேஸ் பேக் தயாரிப்பதற்கு தேவையான உளுந்து மாவை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். உளுந்தம் மா இல்லாதவர்கள் உளுந்தை கழுவி காய வைத்து மாவாக அரைத்து கொள்ளலாம்.
கடையில் வாங்கும் வறுக்காத உளுந்து மாவையும் பயன்படுத்தலாம். அதனுடன் கொஞ்சமாக தேன் கலந்து நன்றாக பசை போன்று கலந்து கொள்ளலாம். தேன் சேராதவர்களுக்கு தேன் கலந்து கொள்ள அவசியம் இல்லை.
இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் சீராகப் பூசவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய விடவும். அதன் பிறகு, முகத்தை மெதுவாக மசாஜ் செய்தவாறே குளிர்ந்த நீரில் கழுவவும்.
இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
