தலைச்சுற்றல் பிரச்சனை இருக்கா? இந்த வீட்டு வைத்தியம் போதும்
இந்த காலகட்டத்தில் தலைவலி பிரச்சனை பலருக்கும் இருக்கும், குறிப்பாக பெண்கள் இந்த பிரச்சனையால் அவதிப்படுவார்கள்.
அந்நேரத்தில் சற்று வலியை குறைப்பதற்காக பலரும் நாடுவது காபியை தான், ஆனால் சிறிது நேரத்திற்கு இது தீர்வாக இருக்குமே தவிர நிரந்தரமாகாது.
உணவுப்பழக்கங்களில் ஏற்படும் மாற்றம், சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளாதது, குறைவான நேரம் தூக்கம் என பல காரணிகளும் தலைவலியை உண்டாக்குகின்றன.
இந்த பதிவில் எளிமையான வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு- 7
பரங்கி விதைகள்- 7
கசகசா- ஒரு டீஸ்பூன்
கோதுமை- 2 டீஸ்பூன்
செய்முறை
இவற்றை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும், காலையில் பாதாம் பருப்பின் தோலை நீக்கி, எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.
தனியாக 2 டேபிள் ஸ்பூன் நெய்யில் 1/2 டேபிள் ஸ்பூன் கிராம்பை போட்டு வறுக்கவும்.
இதனுடன் அரைத்து வாய்த்த பாதாம் கூழை சேர்த்து, பால் விட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து பருகலாம்.
சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நாளடைவில் தலைச்சுற்றல் பிரச்சனை சரியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |