இந்த கஷாயம் மட்டும் போதும்! தீராத காய்ச்சலும் பறந்தோடும்
காய்ச்சல் வந்தவுடனே பதறிப்போய் விடுகிறோம், உண்மையில் காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல, அது பல நோய்களுக்கான அலெர்ட் அறிகுறிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
உடலில் கிருமி தொற்று ஏற்படும்போது, அதை எதிர்த்து போராடும் உடல் எதிர்ப்பு சக்தியின் போராட்டமே காய்ச்சல். இந்த போராட்டத்தின் தன்மையைப் பொறுத்து உடலின் வெப்பம் அதிகரிக்கும்.
அதாவது, சராசரியாக ஒரு மனிதனின் உடல் வெப்பநிலை 98.4°F (37°C) என்று இருக்க வேண்டும். அதற்கு மேல் வெப்பம் அதிகரிப்பதை காய்ச்சல், ஜுரம் என்கிறோம்.
இதில் பல வகைகள் இருக்கின்றன. இது சாதாரண காய்ச்சலாக இருந்தால் சில ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.

பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸ்களினால் ஏற்படும். அவ்வாறு காய்ச்சல் ஏற்படும்போது, உடல்நிலை மிகவும் மோசமாவதுபோல், வேறு சில அறிகுறிகளுடன் காணப்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஏனெனில், நோய்கிருமிகளால் உடலில் பாதிப்பு ஏற்படும்போது காய்ச்சல் ஏற்படும். இதுவே, மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் கடுமையாகத் தாக்கும்போது உயிரிழப்பும் ஏற்படலாம்.
எனவே நமக்கு வந்திருப்பது என்ன காய்ச்சல் என முதலில் அறிந்து கொண்டு அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
தீராத காய்ச்சலுக்கான கஷாயம் - செய்முறை
புளியாரைக் கீரை - ஒரு கைப்பிடி
மிளகு - 10 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
முதலில் புளியாரைக் கீரையை நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள புளியாரைக் கீரை , மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இந்தக் கசாயம் அனைத்து விதமான காய்ச்சல்களுக்கும் அருமருந்தாக உதவும்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.