உங்களுக்கு கழுத்தில் கருமை இருக்குதா? அப்படியென்றால் இதை செய்து பாருங்கள்
Lime
Tomato
Water
By Kirthiga
நம்மில் பெரும்பாலானவருக்கு கழுத்து மற்றும் கைகளின் கீழ் கருமை ஏற்படுவது அதிகம்.
அது ஆண் பெண் என்று பாகுபாடின்றி ஏற்படுகின்றது.
இது எதனால் ஏற்படுகிறது என்று யோசித்துள்ளீர்களா?
கருமை ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்!!
இது பெரும்பாலும் வெயிலில் அலைவதாலும் அதிகளவில் மாத்திரை போடுவதாலும் தான் அதிகளவில் கழுத்தில் கருமை ஏற்படுகின்றது.
அதை நீக்குவதற்காக பல இரசாயன கீறிம்களை பயன்படுத்தி இருப்பீர்கள். அது உங்களுடைய சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஆகவே இயற்கையான முறையில் எவ்வாறு நீக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
- எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
- தக்காளி - 1
- அரிசி மா - 1 தே.கரண்டி
- சர்க்கரை - 1 தே.கரண்டி
- கோப்பி தூள் - 1/2 தே.கரண்டி
- தண்ணீர் - தேவையானளவு
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் கருமை கூடுதலாக காணப்படும் இடங்களில் இந்த கலவை பூசி 5 நிமிடம் வரை மசாஜ் செய்து 10 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும்.
- பிறகு இன்னொரு பாத்திரத்தில் அரிசி மா, சர்க்கரை,கோப்பி தூள் மற்றும் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- தேவையானால் சற்று தண்ணீரும் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- முதலில் ஒரு கலவையை பூசி உலர வைத்து இருப்பீர்கள். அதன் மேல் இந்த கலவையை பூசி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் மீண்டும் உலர வைக்க வேண்டும்.
- பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு 2 வாரங்கள் செய்து வந்தால் கருமை நீங்கி பளிச்சிடும் சருமம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US