நுரையீரலின் நச்சை நீக்க வேண்டுமா?இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிங்க
நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நுரையீரல் மற்றும் இதயத்தின் அஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சுவாசிக்கும்போது நாம் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை, நமது நுரையீரல் வடிகட்டி உடலுக்கு அனுப்ப உதவுகிறது. இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது.
நுரையீரல் உடலில் இருந்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.இந்த வேலைகள் உடலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த நுரையீரலில் நச்சுக்கள் படிந்தால் அது சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதை சரிசெய்ய இருக்கும் வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நுரையீரல் நச்சு நீக்கி
வளியை நாம் சுவாசிக்கும் போது அதில் இருக்கும் பக்டீரியா மற்றும் பிற மாசுக்களை சுத்தப்படுத்தி நல்ல சுவாத்தை வழங்கி நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நுரையீரல் பெரிதும் உதவுகிறது.
இந்த நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.நுரையீரலில் அழுக்கு சேருவதால் ஆஸ்துமா மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். பொதுவாக காலநிலை மாறும் போது மெதசுக்கள் முதலில் பாதிப்பது நுரையீரலை தான்.
பல காரணங்களால் நுரையீரல் பலவீனமடைந்து படிப்படியாக நோய்வாய்ப்படத் தொடங்குகிறது. புகைபிடிக்கும் பழக்கம், மாசுபாடு, புகை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, மக்களின் நுரையீரல் விரைவாக மோசமடையத் தொடங்குகிறது.
அதேபோல நுரையீரலில் அழுக்கு படிவதால் நுரையீரல் சரியாக செயல்பட முடியாமல் போகும். இதனால் சுவாச பிரச்சனைகள் நோய்கள் வரும். இதை வீட்டு வைத்தியத்தின் மூலம் சுத்தம் செய்ய முடியும்.
வெந்நீரில் தேன் கலந்து குடித்தல்
அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு ஆயுர்வேத மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இந்த கூறுகளின் உதவியுடன், தேன் உங்கள் உடலையும் நுரையீரலையும் சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் நச்சுகள் குவிவதை அனுமதிக்காது.
இதேபோல், தேன் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வீக்கத்தையும் குறைக்கிறது. நுரையீரலை சுத்தம் செய்ய தண்ணீரில் தேன் கலந்து குடிக்கலாம்.
ஒரு கப் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேனை கலக்கவும். தண்ணீர் மிகவும் சூடாக இருக்கக்கூடாது இதை காலையில் வெறுவயிற்றில் குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |