தொண்டை வலியால் விழுங்குவதற்கு அவதிப்படுறீங்களா? இந்த வீட்டு வைத்தியம் போதும்
பொதுவாக தொண்டை வலி சளி,இருமல் மற்றும் வைரஸ் தொற்று காரணமாகவே ஏற்படுகின்றது. இது டான்சில்ஸ் எனப்படும் தொண்டையின் பின்புறத்தில் உள்ள இரண்டு திசுக்கள் பாதிக்கப்படுவதனாலேயே ஏற்படுகின்றது.
இந்த திசுக்கள் தான் சுவாசப் பாதையில் நுழைந்து நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்து போராட துணைப்புரிகின்றது.
இவை நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டி பாடிகளை உருவாக்குகிறது. இருப்பினும் இந்த டான்சில் திசுக்களே சில சமயங்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் பாதிப்படையலாம்.
இது டான்சில்லிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.இதுவே தொண்டை வலி ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது.
குறிப்பாக குளிர்காலங்களில் ஏற்டக்கூடிய இந்த நோய்த்தொற்றுகள் ஒரு சில நாட்களில் குணமாகி விடும். சில நேரங்களில் வாரங்கள் வரை நீடிக்கலாம். இந்த டான்சில் விழுங்குவதில் பிரச்சினையை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
இந்த பிரச்சினை தீவிரமடையும் போது சுவாசிப்பதற்கு கூட சிரமம் ஏற்படலாம். இந்த பிரச்சினைக்கு எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் எவ்வாறு தீர்வு காணலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் பால்
கிருமி தொற்றால் ஏற்படும் தொண்டை வலிக்கு மஞ்சள் பால் சிறச்த தீர்வாக இருக்கும். மஞ்சளில் காணப்படும் இயற்கை அன்டிபயோட்டிக் காரணமாக தொண்டை புண்கள் விரைவில் குணமடையும். இது தொன்றுதொட்டு தொண்டை பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் எளிமையாக வீட்டு வைத்தியமாகும்.
இஞ்சி டீ
தொண்டை வலியை குணப்படுத்த மற்றொரு சிறச்த வீட்டு வைத்தியம் தான் இஞ்சி டீ குடிப்பது. இஞ்சியில் காணப்படும் கிருமி எதிர்பு பண்புகள் தொண்டை வலிக்கு விரைவில் தீர்வு கொடுக்கும். இது சளி மற்றும் இருமலை போக்கவும் துணைப்புரிகின்றது.
துளசி சாறு
சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சினைகளுக்கு துளசி சாறு சிறந்த தீர்வு கொடுக்கும். துளசி சாற்றில் காணப்படும் வேதிப்பொருட்கள் நோய் கிருமிகளுக்கு எதிராக செயற்பட்டு தெண்டை புண்ணை விரைவில் குணப்படுத்தும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமிகன் சி நிறைந்து காணப்படுகின்றது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. வெந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு கலந்து குடித்தால் சளி, காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலிக்கு விரைவில் தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |