குளிர்காலத்தில் மார்பு சளியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வெளிப்படையாக, தொண்டை மற்றும் நுரையீரலில் சளி படிவதால் கடுமையான இருமல் மற்றும் தொண்டையில் வலியை ஏற்படுத்துகிறது.
அது மட்டுமின்றி, இந்த தடிமனான சளி மூச்சுத்திணறல், தூங்குவதில் சிரமம், தொண்டை வலி, மார்பு அசௌகரியம் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளையும் ஏற்படுத்தும்.மார்பில் படிந்திருக்கும் சளியை எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் எவ்வாறு சரிசெய்யலாம் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு வைத்தியம்
வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது உங்கள் தொண்டையின் பின்புறத்தில் உள்ள சளியை அழிக்க உதவும். இது தொண்டை புண்னை ஆற்றுவதிலும் பங்கு வகிக்கின்றது.
ஜூஸ், சூப் போன்ற திரவங்களை குடிக்கலாம். இவை தவிர, காஃபின் நீக்கப்பட்ட தேநீர், பழச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
உங்களை சூடாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, அது இயற்கையாகவே சளியை தளர்த்த உதவுகிறது.
இதற்கு, வெந்நீரில் குளித்து, வெதுவெதுப்பான ஆடைகளை அணிந்து, போர்வைகளைப் பயன்படுத்துங்கள்.இது உடனடி தீர்வு கொடுக்கும்.
எலுமிச்சை, இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை சளியை தளர்த்த உதவும். சளி, இருமல் மற்றும் அதிகப்படியான சளிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
மிளகாய் போன்ற கேப்சைசின் கொண்ட உணவுகள் சைனஸை அழிக்கவும், சளியை வெளியேற்றவும் உதவுகின்றன. இவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது மார்பு சளியை விரட்டியடிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |