வீட்டில் இட்லி இருக்கா? அப்போ தாளித்த தயிர் இட்லி இந்த பொருள் போட்டு செய்ங்க
பொதுவாக இட்லி என்றால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆளால் ஒவ்வொரு நாளும் இட்லி செய்து சாப்பிட்டால் போர் அடித்துவிடும்.
அதற்கு தான் இட்லியை வைத்து ஒரு புதிய டிஷ் செய்யப்போகின்றோம். இட்லியை புளிக்க வைத்து செய்வதால் அது நம் குடல் இயக்கத்திற்கு மிகவும் நல்லது.
தினமும் இட்லி சாப்பிட்டால் எடை அதிகரிக்காது, செரிமானத்திற்கு உதவும், குடலுக்கு நல்லது, நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு ஏற்றது, அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிடலாம் நொதித்தல் செயல்முறை ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கிறது.
இத்தனை நன்மைகள் கொண்ட இட்லி மீதி ஆகி விட்டால் அதை உப்புமா செய்து கொடுத்து வெறுக்க வைப்பார்கள். அப்படி இல்லாமல் இந்த தடவை தாளித்த தயிர் இட்லி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- ஐந்து இட்லி
- இரண்டு கப் தயிர்
- ஒரு குடை மிளகாய்
- ஒரு பெரிய வெங்காயம்
- ஒரு டீஸ்பூன் நெய்
- ஒரு டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
- ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் பவுடர்
- கால் டீஸ்பூன் வெள்ளை எள்
- உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். பின்னர் இட்லிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பின்னர் சிறிய பாத்திரத்தில் தயிர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்னர் பாத்திரமொன்றில் நெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடை மிளகாய், வெள்ளை எள், காஷ்மீரி மிளகாய் பவுடர், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தயிர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
இதன் பின்னர் தயிர் கலவையை பொரித்து வைத்து உள்ள இட்லியில் சேர்த்தால் சுவையான தாளித்த தயிர் இட்லி தயார். இந்த தாளித்த தயிர் இட்லி குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |